உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

133

அறிஞர்கள் கொற்கையின் இடமும் தடமும் கண்டு தெளித்துள்ளனர்; ஊர்ப் பெயர்க் கரணியம் பற்றியும் அறியத் தலைப்பட்டுள்ளனர். கொற்கைப் பெயராய்வே இக்

கட்டுரையின் உள்ளீடு.

கொற்கை என்பது, 'கொல்கே', 'கொல்கீஸ்' என்று கிரேக்க நாட்டவராலும் உரோம நாட்டவராலும் குறிக்கப் பெற்றுள்ளதாம்! திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் ‘கொல்கை’ என்ற குறிப்புள்ளதாம். ஆதலால் கொல்கை என்னும் பெயரே கொற்கை ஆகியிருக்க வேண்டும் என்று அறிஞர் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வந்தார்.

-

கொல்கை என்பதைக் 'கொல் கை' எனப் பிரித்துக் காலை செய்யும் கைபோன்றது' என்று பொருள் கண்டார். தொன்முது மாந்தன் கொல் கருவி கையாகவே இருந்ததாகலின், அப்பெயர்ப் பொருத்தத்தால் 'கொற்கை'யாகி காற்கை'யாகி இருக்க வேண்டும் என்று விளக்கினார்! கொற்கையில் இருந்தவர் மட்டுமோ கொல்கையர்? இக்கொடுமைப் பெயரையோ தம் ஊர்க்குச் சுட்டி உவகையுறுவர்?

முனைவர் கால்டுவெல் வரைந்த திருநெல்வேலி வரலாற்று நூலை மொழி பெயர்த்தவர் முனைவர் திரு. ந. சஞ்சீவி. அவர் வ்வாய்வுக்கு, ஒரு மேல் விளக்கக் குறிப்புக் காட்டினார். கடற்கரைப் பட்டினமாகிய அந்நகர்க்கும் கடல், அலைப்புக்கும் உள்ள தொடர்பை உன்னி, 'அலைகள் கொல்லும் (தாக்கும், தகர்க்கும்) இடம்' என்று பொருள் கண்டார். அதற்குக் “கடற் கரை மெலிக்கும் காவிரிப் பேரியாறு" என்னும் சிலம்பின் அடியையும் மேற்கோள் காட்டினார். இஃது அலைத் தாக்கு தலை நிறுவும் சான்றேயன்றி ஊர்ப் பெயர் அமைதிக்கு உரிய சான்றாகாது என்பது வெளிப்படை. கால்டுவெல் காட்டிய 'கொல்' என்னும் சொல்லுக்கு வேறு நயம் காட்டி விளக்கிய விளக்கமே இஃது என்ற அளவில் அமையலாம்; அவ்வளவே! பொருளொடு பொருந்துவது அன்றாம்.

கை' என்பது இடப்பொருட்சொல் என்று முனைவர் சஞ்சீவியார் கூறுவது ஏற்கும் இனிய குறிப்பு. குறுக்கை, திருவதிகை, திருக்கடிகை, வேளுக்கை, திருத்தணிகை என்னும் இன்ன ஊர் பலவும் இவ்வியலால் அமைந்தனவேயாம். ஆனால், 'கொல்' என்னும் சொல் பற்றி ஆய்ந்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்!