உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கொல் என்பதன் பொருள் கொலைத் தொழிலொடு தொடர்பு கொண்டதோ? கொல்லுத் தொழிலொடு தொடர்பு கொண்டதோ? முதற்கண் ஆய்வுக்குரிய செய்தி ஈதே.

ஒரே சொல் மூலத்தின் வழியே அமையும் பல பொருட் புணர்ச்சியை முட்டுறா வகையில் அமைத்தலே சங்கச் சான்றோர் வழக்கு. அவ்வழக்கினைக் கொண்டு ஆய்தலே முட்டறுத்து முடிவுறுத்த வல்லதாம்!

கொல்லுதல் தொழில் சுட்டும் புணர்ச்சிகள் எல்லாம் இயல்பு வழிப்பட்டன. கொல்குறும்பு, கொல்படை, கொல்பிணி, கொல்புனம், கொல்களிறு என்றே பழ நூல்களில் பயின்றுள. கொற்குறும்பு, கொற்படை, கொற்பிணி, கொற்புனம், கொற் களிறு என எங்கும் ‘ல' கரப்புள்ளி, 'ற' கரப்புள்ளியாய்த் திரிந்தன அல்ல.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு

“சொல்லுறழ் மறவர்தம் கொல்படைத் தரீஇயர்”

“கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க”

“கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கம்

"கொல்புனக் குருந்தொடு கல்லறைத் தாஅம்

-திருக்குறள். 735

பதிற். 58.

பதிற். 67.

– பதிற். 50.

- அகம். 133.

“இருஞ்சே றாடிய நுதல கொல்களிறு"

- நற். 51.

“கொல்களிற்று ஒருத்தல்”

- நற். 92.

“கொண்டி மறவர் கொல்களிறு பெறுக"

– பதிற். 43.

“கொல்களிற்று உரவுத்திரை பிறழ”

பதிற். 50

“கொடி நுடங்கு நிலைய கொள்களிறு மிடைந்து”

பதிற். 52.

“கொல்களிறு மிடைந்த பஃறொல் தொழுதி” “கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்” “கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்” “உயர்ந்தோங்கு மருப்பிற் கொல்களிறு”

பதிற். 83

- புறம். 9

- புறம். 55

புறம். 153.