உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

135

கொல்' எனும் இவையெல்லாம், கொலைத் தொழிற் பாற்பட்டு, வல்லின வருமொழிமுன் இயல்பாய் நின்றன. இனிக், கொல்லுத் தொழில் தொடர்பினவற்றைக் காண்போம்.

தொண்டைமானுழைத் தூது சென்ற ஒளவையார் பாடிய புறப்பாட்டில் படைக்கலங்களைச் சுட்டிக் காட்டி,

“இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன்காழ் திருத்தி நெய் யணிந்து

கடியுடை வியனக ரவ்வே; அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ”

என்பதில் கொல்லுத்துறை ‘கொற்றுறை’யாதல் அறிக.

“கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி”

என்னும் ஐந்திணை ஐம்பதும் (21),

“கொற்சேரித், துன்னூசி விற்பவர் இல்"

என்னும் பழமொழியும் (5) ‘கொல்லுச் சேரி' யைக் கொற்சேரி என்றது அறிக.

கொற்பழுத் தெறியும் வேலர் என்று வேலும் (435) கொற்புனைந்தியற்றிய கொலையமை கூர்வாள் என்று வாளும் (1. 46, 89) சிந்தாமணியிலும் பெருங்கதையிலும் வந்தமை அறிக.

னி, ஆசிரியர் தொல்காப்பியனார்,

“நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல"

என்றும், (371)

பவணந்தியார்,

“நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்வழி யானும் றகர மாகும்”

என்றும் (232) விதி வகுத்தலையும், இவற்றுக்கு உரை கண்டோர் காட்டிய எடுத்துக்காட்டுகளையும் நோக்குக.

“கொல் என்பது சூர் என்றாற் போலக், 'கொல்லன் என்னும் உயர்திணைப் பொருளைக் காட்டி நின்ற அஃறிணைச்