உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம் 16

காப்பிய முதல்வராகிய இளங்கோவடிகளார் தம் காவியத்தின் நாயகன் கோவலன், காவலன் ஆணையால் வெட்டுண்டு இறந்த செய்தியைக் கூற வருகிறார். நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே கூறாமல் வெட்டுதல், உடல் துண்டாதல், றத்தல் ஆகியவற்றை மறைத்துக் “காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்” என்று அமைகின்றார். கண்ணகியார் காவலனைக் கண்டு வழக்குரைக்க, உண்மையுணர்ந்த பாண்டியன் அரியணையில் இருந்து வீழ்ந்து இறந்தான்; அவனைத் தழுவிக் காண்டே கோப்பெருந்தேவியும் ஆருயிர் விடுத்தார்.இச் செய்தியையும் இளங்கோவடிகள் நா,

"மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகஎன் ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே; தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”

என நயம் பெற உரைக்கின்றது. ‘மயங்கி வீழ்தல்', ‘தொழுது வீழ்தல்' என்பவற்றால் குறிப்பாய் அறிய வைத்து நிகழ்ச்சியை உணர்த்தி விடுகிறார்.

இனிச் சேக்கிழார் நாநயம் நனி சிறப்புடையதாம். சிவ நெறிச் சீர்மையில் அழுந்திய அவர் உள்ளம் செவ்விதின் வெளிப் பட அவர் தம் வாக்குகள் மிளிர்கின்றன.

மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்லக் கருதி முத்த நாதன் செல்கின்றான். அதனைச் சொல்லக் கருதுகிறார் சேக்கிழார்; சொல்லத் தயங்குகிறார்; அவன் செல்லும் நிலைமையைச் “செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரிற் சேர்வான்”, என்கிறார். 'செப்ப அருநிலைமை' என்பது யாது? “எம்மால் சொல்லுதற்கு அதன் கொடுமையை நினைந்து உருகிப் போம் யாம்சொல்லுதற்கு அரிய நிலைமை”, என்று சொல்லாமல்

சொல்லாடுகிறார்.

முத்தநாதன் தவிசின் மேல் அமர்ந்தான்; மெய்ப் பொருளார் நிலத்து அமர்ந்தார்; அவர்க்கு மறைநூல் ஓதுதற்குச் சுவடி அவிழ்ப்பான் போல் உடை வாளை எடுத்துக் குத்தினான். குத்தினான் அல்லது வெட்டினான் என்னும் சொல்லைத் தம் வாயால் கூறவும் மனங் கொள்ளாத சேக்கிழார்,