உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

"மண்ணேகொள்நீ” என்று கூறியவர் இராமன் காடு செல்லுதலைக் கூறவும் பொறாராய் ‘மற்றையது ஒன்றும் மற’ என்பது எத்துணை நயமிக்கது; தயரதக் கம்பன் தகுதி பளிச்சிடும் சொல் நாகரிகம் இதுவாகும்.

பண்டை நூலாசிரியர் போலவே உரையாசிரியர்களும் சொல் நாகரிகராக இலங்கினர். நூலாசிரியர் குறிப்புகளை யெல்லாம் நன்கறிந்து நயந்து திளைத்தனர். பயில்வார்க்கும் எடுத்துக் காட்டினர். புறநானூற்றின் 34 ஆம் பாடலில் வரும்,

66

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

99

என்னும் பகுதிக்கு விளக்கம் எழுதும் பழைய உரையாசிரியர் "கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின் ஆன்முலை யறுத்தல் எனவும், மகளிர் கருச் சிதைத்தல் எனவும் குரவர்த் தப்பிய எனவும் மறைத்துக் கூறப்பட்டன என்று குறிப்பு எழுதுவது அவரது புகழ்ச் செந்நாச் சீர்மைக்குச் சான்றாகும்.

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் நறுமணம் பரப்புவ தாக அமைந்த நயத்தக்க நாகரிகச் சொற்களைக் கூறுவதே புலவர் புகழ்ச் செந்நா இயல்பு என்பது இங்குச் சான்றுகளால் சுட்டப் பெற்றது. இதனைப் போற்றி ஒழுகுதல் பொதுவில் புலமையாளர் கடமையாம்! ந்நாளில் புனை கதை எழுதுவோர் பலர் தம் நெஞ்சில் இத்தகைய நயநாகரிகத்திற்குத் துளியளவு டந்தந்தேனும் எழுதுகின்றனரா? பச்சை பச்சையாய் எழுதி ளையர் உள்ளங்களைக் கெடுக்கும் இவ்விழிவாளர் செய்கையைப் புலமையாளர்கள் தடுத்து நிறுத்தி வளரும் இளமையைக் காத்தல் தீராக் கடமையாகும்.

3. மீன் அருந்தும் நாரை

அவனோ நெய்தல் நிலத்தலைவன். துறைபல ஓடி நிறை பயன் சேர்ந்தவன்; அவனது துறையின் தன்மையும், வனப்பும் நோக்கிச் சான்றோர்கள் "தண்ணந் துறைவன்” என்னும் சிறப்புப் பெயரால் அழைத்தனர். அவனது துறையில் எப்பொழுதும் ஆரவாரம் ஓயாது, ஒழியாது.