உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

நூன் முகம்

"தமிழ்வளம் பொருள்” என்னும் பெயரிய இந்நூல், திருக்குறள் ஆராய்ச்சி, சிலப்பதிகார ஆராய்ச்சி, பன்னிலை ஆராய்ச்சி என்னும் முப்பெரும் பகுப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாகும்.

இதன் கட்டுரைகள், மலரில் மலர்ந்தவை, இதழில் நடந்தவை; பொழிவில் புகன்றவை என்னும் முத்திறத்தன. இதழ்களுள் செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, குறளியம் என்பவை தாங்கி வந்தவை பெரும்பாலனவாம். கையெழுத்துப்படியில் இருந்து, வருவனவும் உண்டு.

-

பதிப்பு

த்தொகுப்பில் வரும் கட்டுரைகள் எல்லாமும் இலக்கியம் - இலக்கணம் வரலாறு பாடம் என எவ்வகையின ஆயினும் அவையெல்லாம், பொருள் குறித்த ஆய்வுகளே. பொருளாய்வை நிறுவுதற்கு வேண்டும் அளவிலேதான் சொல்லாய்வு இடம் பெற்றுள்ளது. சொல்லே ஆய்வாக வெளிவர இருக்கும் தொகுதிகள் பல. அவற்றுள், அடுத்து வெளிவர இருப்பது ‘தமிழ்வளம் - சொல்' என்பதாகும்.

ஆய்வு என்பது மாசு போக்கி மணியாக்கலும், தூசி போக்கித் தூய்மையாக்கலும், இழுக்கம் போக்கி ஏற்றம் காட்டலுமாக பலதிறத்தன. மணியாக்கல், தூய்மையாக்கல், ஏற்றங் காட்டல் என்பவற்றிலும் சறுக்கல்களும், வழுக்கல்களும் ஏற்படலாம். “அறிதோறும் அறியாமை கண்டற்று” என்பது விரிந்தோங்கும் அறிவு இலக்கணமாகலின், அவ்வறிவியல் ஆக்கமென, ஆய்வியலும் வழிவழியாகத் தட்டித் தடவிப் பார்த்து உண்மை காண்பதாய் அமைதல் உறுதியாம்.

உண்மை காண்பிக்கு ஓர் உளப்பாடு வேண்டும். அஃது என்றும் உண்மையை வழிபாடு செய்வதோடு நில்லாமல், உண்மை வழிப்பட்டு நிற்பதாம். இதனை, “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்”, “எப்பொருள் எத்தன்மைத்தாயினும்” என்னும் குறள் மணிகள் கையிடைக் கனியாய்க் கண்ணேர் காட்டும். 'கருமமே கட்டளைக்கல்' என்பது நிலை நாட்டும்!