உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ் வளம் 16

தான் காணும் உண்மையை உலகவர் முன் வைக்கும் உண்மை காண்பி, உண்மை காண்பிகளாம் பிறர் கருத்துகளுள் தக்கவை காணின் தான் பெற்ற பேறாக உவந்து, தன் ஆய்வைத் திருத்திக் கொள்வதுடன், மீள்பதிப்பு வருங்கால் அச்சீரிய ஆய்வைச் சுட்டி நேரிய நெஞ்ச வெளிப்பாட்டாளியாகத் திகழ வேண்டும். னனில் உண்மை காண்பிக்கு உண்மை காண்பதே உயிர்ப்பு என்பதால், எவர் கண்டறிந்த உண்மை என்பதற்கு இடமே இல்லையாம். தக்கதை மதித்தல் என்னும் தகவே உண்மை காண்பியின் உயிர்ம்மை என்க.

மேற்கோள் காட்ட எழுந்த நூலன்று வள்ளுவம். மேற் கொண்டொழுகத் தக்க மேன்மையது என்பதை நாட்டுவது வள்ளுவ வாழ்வு நூல்.

காண

வள்ளுவத்தைப் பல்வேறு கோணங்களின் திரட்டாகக் காண்பது உதிர்மலர். மறைக்கப்பட்டதன்று மறைப்பொருள்; காப்புப் பொருளது என்பது மறை. முப்பால் முறைவைப்புத் தமிழ் வழியதென்பது நான்காம் கட்டுரை. தமிழ்ப்பழ நூல் மரபுவழியும் குறள் மரபு வழியுமே குறளுக்கு உரை வேண்டும் என்பது அடுத்தது. திருக்குறளிலும் தொல்காப்பிய வண்ணங்கள் உண்டு என்பது மூவின வண்ணம். அசைநிலையும் பொருள் நிலைப்பட்டுப் புகழ் நிலை பெறலை நிறுவுவது கொல்லே ஐயம். பாட வேறுபாடு முறையோடு கூடாமை உரைப்பது எட்டாம் கட்டுரை. வலியாவழி வலித்தலால் பொருளுற்றம் புகல்வது ஊற்றும் ஊற்றுக்கோலும், வரலாற்றில் வன்கொடுமை மொழியாக்க மரபு சுட்டுவது. காமத்துப்பால் தொல்காப்பியத் தொல்வழிப்பட்டமை நிறுவுவது 17- ஆம் கட்டுரை.

இயல்புடைய மூவர், அயல்புடைய மூவர், தென்புலத்தார் தெய்வம் என்பன வாழ்வியல் நெறிப் பொருள் வாய்ப்பன. விருந்தில் விருந்து' விருந்துக் குறள் ஒன்று பதினொரு வகைப் பொருளுற நிற்பது பற்றியது. தீயினால் என்பது 'ஆல்' ஆய்வு பற்றியது. 19, 20 - ஆம் கட்டுரைகள் கா. சு. தெளிவுரை, குறளோவியம் பற்றிய ஆய்வுகள்.

இரண்ட ாம் பகுதியாகிய சிலப்பதிகார ஆய்வு, ளங்கோவடிகள் முதுபேராளராகிய நிலையிலேதான் சிலம்பு இயற்றினார் என்பதையும் (1), ஓர் உருபு செய்த கொலையே ஆயிரவர் கொலை என்பதையும் (2), செங்குட்டுவன் என்னும் பெயரடை செங்கோல் பண்பால் பெற்ற பெயர் என்பதையும் (3),