உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

3

எட்டா மலைவாணரும் மதிக்கும் அரசே கண்களி மயக்கக் காதல் தரும் என்பதையும் (4), போற்றா ஒழுக்கம் என்பது பிரிவொழுக்கம் என்பதையும் (5), கண்ணகியாரே செல்வத் தம்மன் (திரு) ஆனார் என்பதையும் (6), சிலப்பதிகார மங்கல வாழ்த்தின் முன் வைப்பும் முறை வைப்பும் பற்றிய விரிந்த ஆய்வு இவை இவை என்பதையும் (7), ஏட்டுப்படியுடன் அச்சுப்படியை ஒப்பிட்டுக் கண்ட சிலம்புப் பாடத் தெளிவுகள் இவை என்பதையும் (8), கொல்லுத் தொழிற் சிறப்பால் கொற்கைப் பெயர் கொண்டதையும் (9), அணில் வரிக்காய்ப் பெயர்ச் சீர்மையையும் (10), சிலப்பதிகாரப் பெயரில் உள்ள வலித்தல் விகாரம் பொருள் நலச் சிறப்புடையது என்பதையும் (11), முறையே கொண்டது.

மூன்றாம் பகுதி அதன் பெயர்க்கேற்பப் பல்வேறு ஆய்வுகளைக் கொண்ட 19 பகுதிகளையுடையது. இலக்கியம் என்பதன் சீர்மை, பொய்யாப் புகழ்நாவே புலவர் நாவு, என்பவை முதலிரு கட்டுரைகள். அடுத்தவை இரண்டும் குறுந்தொகை, கம்ப ராமாயணக் காட்சிகள். சங்க இலக்கியத்தால் அறியப் பெறும் தோழியின் சிறப்பும், யாமச் சிறப்பும் அடுத்த இரண்டு கட்டுரைகள். 7,8 நடைமுறைக் காட்சிகள். 9, 10, 11 சங்க இலக்கிய ணர்வு, உண்மை ஆய்வுகள், அடுத்தது இலக்கணச் சீர்மையில் இயலும் இலக்கிய நயம் பற்றியது. வள்ளலார் கற்ற புலமைக் கல்வி பற்றியது 14. பல்வேறு பதிப்புகளின் பருந்துப் பார்வை 15. அடுத்த இரண்டும் இலக்கண ஆய்வுகள். அடுத்தது தண்ட பாணியடிகளின் ஒரு நூல் பற்றிய ஆய்வு. இறுதியது சொல்லின் பொருள் வளமாம்.

கா.சு. திரு.மீ.சு.

த்தொகை நூல் வெளிவரத் தூண்டுதலும் துணையு மாகிய பெருமகனார் தமிழ்க் கா. சு. நினைவு இலக்கியக் குழு நிறுவனர் தமிழ்ச்சுடர் திரு. மீ. சு. இளமுருகு பொற்செல்வி அவர்கள். இதற்குப் பொருளுதவி செய்தது, தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித் துறை. எழிலுற அச்சிட்டு வழங்கியவர் மூவேந்தர் அச்சகத்தார். இவர்களுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றியன். வாழிய தமிழ்! வாழிய வையகம்!

(பாவாணர் ஆராய்ச்சி நூலகம்) திருநகர், மதுரை - 625006.

[தமிழ்த் தொண்டன்,]

இரா. இளங்குமரன்.