உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ் வளம் 16

எல்லாம் எடுத்துரைப்பாள். தலைவன் காணாமல், தலைவியை மறைத்தும் வைப்பாள். அவள் நோக்கமெல்லாம் தலைவன் தலைவியர் அன்பைப் பெருக்கி ஆக்கப்படுத்த வேண்டும் என்பதேயாம்.

தினைக்

ஒரு மலையடிவாரம்; தினைக்கொல்லை; காவலுக்குத் தலைவியும் தோழியும் செல்கின்றனர். அங்கே தலைவன் வருகிறான். அவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியினிடம் சொல்கிறாள்.

"தோழி! கதிர் கொய்வதற்கு முன்பே கொய்தது போல் தட்டை உள்ளது. கதிர்களைக் கிளிகள் கவர்ந்து போகின்றன. நீ அணிந்துள்ள மாலை அசையுமாறு அடிக்கடி எழுந்து ஒலியெழுப்பி அங்கும் இங்கும் சென்று கிளிகளை ஓட்டா விட்டால் நம் அன்னை 'இவள் கிளியோட் வள் கிளியோட்ட அறியாள்' என எண்ணி வேறு யாரையாவது காவலுக்கு அனுப்பி விடுவாள். அவ்வாறானால். நம் அன்புத் தலைவரைக் காண்பதற்கு அரிதாகும்" என்று கூறுகிறாள். இதனால், தலைவன் நினைத்த போதெல்லாம் தலைவியைக் காணல் அரிது என்பதைக் கூறி விரைவில் மணம் செய்து கொள்ளுமாறு தூண்டுகிறாள் தோழி.

ஒருநாள் இரவுப் பொழுதில் தலைவியைக் காணத் தலைவன் வந்தான். அவன் வந்துள்ளதற்கு உரிய அடையாளம் செய்தான். தோழி விழிப்பாக இருந்து அறிந்து கொண்டாள். அப்படியே அன்னை முதலியவர்களும் விழித்திருந்தால் வெளியேற முடியாதே. அதனால் ஒரு சூழ்ச்சி செய்தாள்.

66

நான்

‘அன்னையே, வாழ்வாயாக! 6 சொல்வதைக் கேட்பாயாக! நம் தோட்டத்தில் உள்ள கூதாளஞ் செடியின் மீது அருவி விழும் ஒலி கேட்டாயோ?" என்றாள்.

அன்னை மறுமொழி தந்திலள்.

தோழி மீண்டும் கூறினாள்; “அன்னையே வாழ்வாயா நம் தோட்டத்தில் உள்ள அசோகின் அடிமரம் ஒடியுமாறு இடி விழுந்தது கேட்டாயோ?” என்றாள். இதற்கும் அன்னை மறு மொழி தந்திலள். ஆகவே, அவள் நன்றாக உறங்குகிறாள் மற்றவர்களும் உறங்குகிறார்கள். தக்க பொழுது இதுவே என்று தலைவியை அழைத்துச் செல்கிறாள். இதனைத் தலைவன் கேட்கவும் சொல்கிறாள். காலம் நீளாமல் கடிமணம் செய்ய வேண்டும் என்பதே அவள் கருத்தாம்.