உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

173

தலைவன் பொருளே குறியாக இருக்கிறான். வாழ்வுக்குப் பொருள் வேண்டும் என்பது தோழிக்கு நன்றாகவே தெரியும். பொருள் இருந்தால் அறத்திற்கு அளிக்கலாம். வறியோர்க்கு கு வழங்கலாம். விருந்தினரைப் பேணலாம். சுற்றத்திற்கு உதவலாம்; வேண்டும் நுகர்ச்சிகளை வேண்டுமாறு பெறலாம். ஆனால், இப்பொருள் தேடுவதையே, தொழிலாகக் கொண்டு இனிய இல்லற வாழ்வைத் தலைவன் பாழாக்கிக் கொள்வதை அவள் விரும்பவில்லை. ஆதலால், அறிவறிந்த தலைவனும் அறியுமாறு நயமாகக் கூறுகிறாள்.

“தலைவ, செல்வாக்குடன் வாழ்வதும், விரைந்து செல்லும் ஊர்திகளில் போவதும் ‘செல்வம்' என்று சொல்லப் படுவன அல்ல. அவை அவ்வவர் செயல் திறனால் அமைபவை; உயர்ந்த பெருமக்கள் செல்வம் என்று சொல்வது தன்னைச் சேர்ந்த வர்களைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கனிவு ஒன்றுமேயாம்” என்றாள்.

வாழ்வாவது யாது என்பதையும் விளக்குகிறாள் தோழி. ஒரே ஓர் உடையே உடையவராய், அவ்வுடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்பவராக இருந்தால் கூட, பிரிவும் பிணக்கும் இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்பவர் வாழ்க் கையே வாழ்க்கையாம்.

66

“ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

99

சிறுவயதிலே எத்தகைய பேரறிவு தோழிக்கு. தோழி, சிறுப்பெருமகள் என்னும் பாராட்டுக்கு உரியவள்.

தலைவன் ஒருவன் பிரிகிறான்; தலைவி ஆற்றாமல் வருந்துகிறாள். அவளை ஆற்றித் தேற்றும் பொறுப்பு தோழிக்கு உண்டாகிறது. அந்நிலையில், தலைவன் நல்லியல்புகளை யெல்லாம் சொல்லித் தலைவியை மகிழ்விக்கிறாள்; கவலையை மாற்றுகிறாள்.

"தோழி! தலைவர் நெடுந்தொலை சென்றிருப்பது உண்மைதான். ஆயினும் அவர் மிகப்பேரன்பினர் என்பதை மறக்க முடியுமோ? கோடிகோடியாகச் செல்வம் குவிந்தாலும் குறித்துச் சென்ற பொழுது தவறாமல் வந்தே தீர்வார்.

"தோழி! நம் தலைவர் நம்மை விட்டுப் பிரியக் கூடியவரோ, பிரிந்தாலும் கவலை இன்றித் தங்கக் கூடியவரோ? நாம் படும்