உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

துயரினும் அவர் படும் துயர் பெரிதாகி ஓடி வருவார். இதோ

பார்!

66

“நாம் தலைவரை நினைக்கும் போதெல்லாம் தவறாமல் பல்லி நல்ல சொல் சொல்வது, கேட்கவில்லையா? நீ கவலை ஒழிக” என்கிறாள். இப்பொழுது தோழி ஒரு நல்ல மருத்துவி!

காட்டையும் காட்டாற்றையும் கடந்து அஞ்சாமல் நள்ளிரவில் தலைவன் வருகிறான். அவன் வரும் வழியை நினைத்து அஞ்சி அஞ்சித் துன்புறுகிறாள் தலைவி! இவ் விருவர்க்கும் இடையே தவிக்கிறாள் தோழி! அவள் தவிப்பைக் கேட்டு நாமும் தவிக்கிறோம்!

"தலைவனே, நீ வழியச்சம் பாராது வருகிறாய்! இவளோ தன் பெண்மையால் உனக்கு என்ன நேருமோ என அஞ்சுகிறாள்! தான் பெற்ற இரட்டைப் பிள்ளைகளும் ஒரே வேளையில் நஞ்சுண்டதைக் கண்டு தவிக்கும் தாய் போல உங்களைக் கண்டு நான் தவிக்கிறேன்.”

-

தோழியின் தாய்மை ததும்பும் இடம் இது.

தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரு பிணக்கு. தலைவன் வீட்டுக்கு வருவது இல்லை. தலைவி அவன்மேல் கொண்ட சினம் ஆறுவது இல்லை. இந்நிலையில் மிக நொந்து போகிறாள் தோழி.

“அன்னி என்பவனுக்கும் பெரியன் என்பவனுக்கும் ஒரு போர்; அப்போரில் ஒரு புன்னைமரம் வெட்டுப் பட்டது. அது வெட்டுப்பட்ட அளவில் போர் ஓய்ந்தது. அதுபோல் உங்கள் இருவருக்கும் உள்ளபகை யான் இறந்து போனால் என்னோடு ஒழிந்து போகும் போலும்” என்றாள்! தன்னுயிர் தந்தும் அவர்கள் நலமாக வாழ வேண்டும் என்னும் பெருந்தகைத் தோழி உள்ளம் தெய்வ உள்ளமேயாம்.

வாழும்

பிறருக்கெனவே தோழிக்கு அத்தனை தொல்லைகளுக்கு இடையேயும் ஒரு மகிழ்ச்சி; அது தலைவியின் புகழ்ச்சியாகும்.

"தோழி, தலைவன் குடி நன்கு உடையன்: கூடுநர்ப் பிரியலன்; கெடுநா மொழியலன்; அன்பினன் என்று சொல்லி நாங்கள் மணந்து கொள்ளுதற்கு வேண்டுவன வெல்லாம் சய்தாய். உண்மையாகவே அவன் நல்லன்; இனியன்; இன்பமூட்டும் இசையினும் இனியன்; இசைக்கு அமைந்த