உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ் வளம்

“செங்கதிர் பொங்கி வருவதுண்டு - நல்ல

செந்தா மரைகள் மலர்வதுண்டு மங்கையே காலைப்பொழுதை உணர்ந்திட மற்றும் கடிகாரம் வேண்டுமோடி? முல்லை யரும்பு விரிவதுண்டு - ஆம்பலின் மொட்டுகள் மெள்ள அவிழ்வதுண்டு மெல்லியலே மாலை வேளை யறிந்திட

வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி? கம்மென வாசம் கமழ்பாரி சாதம் -இக் காவில் மலர்ந்து சொரிவதுண்டு அம்மையே நள்ளிர வீதென்று சொல்லிட ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி?”

16

பாரிசாதம் மலர்வதைக் கொண்டு நள்ளிரவை அறிந்து காள்ளலாம் என்கிறார் கவிமணி. கபிலர் தாம் பாடிய குறிஞ்சிப் பாட்டில் 'நள்ளிருள் நாறி' என்னும் ஒரு மலரைக் குறிப்பிடுகின்றார். நள்ளிருளில் மலர்ந்து மணம் பரப்பும் பூ என்பது அதன் பொருள். அந்நள்ளிருள் நாறி என்பது ‘இருள் வாசி'யாகும். அப்பூவே ‘இருவாட்சி' என வழங்கப் பெறுகின்றது.

இமை என்னும் அரங்கத்தில் எழிலுற நடிக்கும் நங்கை துயில் என்னும் மங்கை. அவள் செங்கோலாட்சி சிறப்பாகச் செய்யும் பொழுது நள்ளிரவே ஆகும். ஆதலால், “பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமம்" என்றார் ஒரு புலவர். "கடல் மீன் துஞ்சும் நள்ளிருள் யாமம்” என்றார் இன்னொரு புலவர்.

நள்ளிரவு கனவுக்கு நல்லிரவாகும். இதனை இலக்கியங்கள் விரித்துக் கூறுகின்றன.

ஒருத்தி தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். கண்ணைத் திறக்குமாறு செவிலித்தாய் எவ்வளவோ வேண்டினாள். மன்றாடினாள்; கடிந்தும் உரைத்தாள். ஆனால் அவளோ கண்ணைத் திறக்காமல் கையாலும் இறுக்கமாக மூடிக் கொண்டாள்.“என் உயிரைப் போக்கினாலும் சரி; என் கண்ணைத் திறவேன். என் கனவில் பாண்டியன் தன் யானையுடன் என் கண்ணுள் புகுந்துள்ளான். கண்ணைத் திறந்தேனோ என்னை விட்டுத் தப்பிப் போய்விடுவான்" என்றாள். காதல் களி மயக்கத்தில் உளறும் இதனை முத்தொள்ளாயிரப் பாட்டொன்று காட்டுகின்றது.