உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

177

பகுத்தறிவுடைய மக்களையன்றிப் பறவைகளும் விலங்கு களும் கூடக் கனவு கண்ட நிகழ்ச்சிகளைப் புலவர்கள் படைத் துள்ளனர். தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் தன் பெட்டையுடன் தங்கிய கடற்காக்கை, வெண்ணிற இறால்மீனைத் தான் பற்றித் தின்பதாகக் கனவு காண்பதை வெண்ணாகனார் என்னும் புலவர் கூறுகின்றார். சுனைப் பூவில் தேனுண்ட வண்டு காந்தள் பூவில் கண்ணுறங்கி யானையின் கன்னத்தில் ஒழுகும் மதநீரை அருந்துவதாகக் கனவு கண்ட செய்தியைத் தாயங்கண்ணனார் என்னும் புலவர் குறிப்பிடுகின்றார்.

களவு செய்யக் கருதுவார்க்கு நள்ளிரவுப் பொழுது மிகக் கொண்டாட்டமானது. களவு போகாமல் காக்க முனைவார்க்கு ந்நள்ளிரவு மிகத் திண்டாட்டமானது. பொருட் களவு செய்வாரை அன்றிக் காதற் களவுக்கும் கவின் மிக்க பொழுது நள்ளிரவே ஆகும்.

களவையும் பிற கயமைகளையும் நாட்டில் ஒடுக்குதல் காவலர் கடமை. ஆதலால் பண்டை வேந்தர்கள் தாமே மாறு கோலம் பூண்டு மறுகில் திரிந்து காவல் புரிந்தனர். இதற்குப் பொற்கைப் பாண்டியன் வரலாறு சான்றாகும்.

நாட்டை நல்வழியின் நடத்தினால் மட்டும் போதுமா? வேற்று நாட்டவர் தாக்குதல் நேருங்கால் அவர்களை அடக்கி

ஒடுக்க வேண்டியதும் ஆள்வோர் கடமையாம். அவ்

வேளைகளில் வீரர்கள் கண்படை கொண்டாலும் வேந்தர் கண்படை கொள்ளாது கடமையாற்றினர். நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளாது பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறைக்கண் பணி செய்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் புலவர் நக்கீரனார்.

L

வாடைக் காற்று வன்மையாக அடிக்கின்றது; பாண்டில் என்னும் ஒருவகை விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு ஏவலர் வருகின்றனர். படைத் தலைவன் வேப்பம்பூ மாலை சூட்டிய வேலைத் தாங்கி முன்னே செல்கின்றான். குதிரை தன்மேல்பட்ட மழைத் துளியை உதறிக் கொண்டு நடக்கின்றது. பாண்டியனின் இடத்தோளில் கிடந்த மேலாடை சிறிது நழுவுகின்றது. அதனைக் கையால் அணைத்துத் தழுவிக் கொள்கின்றான். வாளேந்திய வீரன் ஒருவனின் தோள்மேல் தன் வலக்கையை வைத்துக் கொள்கிறான். போரிலே விழுப்புண்பட்ட வீரர்களைத் தனித் தனி கண்டு அளவளாவுகின்றான். அவர்கள் செய்த செயற்கருஞ்செயல்களைச் சொல்லிச் சொல்லிப்