உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

16 இளங்குமரனார் தமிழ் வளம்

L

புகழ்கின்றான். அவர்கள் பட்ட புண்ணைத் தான் பட்டதாக உணர்ந்து வருந்துகின்றான். இன்மொழியும் புன்முறுவலும் லங்கப் பணி செய்து மகிழ்விக்கின்றான். வேந்தன் அரவணைப்பிலே வீரர் விம்மிதம் அடைகின்றனர்!

நெடுநல் வாடை காட்டும் நள்ளிரவுக் காட்சி இது. கலித் தொகை காட்டும் ஒரு காட்சியைக் காண்போம்!

ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவுப் பொழுது; ஒரு முதியவன்; முடவன்; வழுக்கைத் தலையன்; குட்ட நோயால் காலும் கையும் குறைந்தவன்; ஒரு தெருக் கோடியில் நின்றான். அங்கே அழகிய நங்கை ஒருத்தி தன் காதலன் குறிப்பித்தபடி அவனைக் காண்பதற்கு வந்தாள். அங்கு நின்ற முதியவன் “மகளிர் நிற்கும் காலம் அன்றாக இவ்விடத்து நிற்கும் நீ யார்?" என்று

வினாவினான்.

“சிறியவளே, என்னாலே அகப்படுத்திக் கொள்ளப் பட்டாய்' என்று நெருங்கினான். வைக்கோலைக் கண்ட கிழ எருது போலப் பக்கத்தில் இருந்து போகாமல் நின்றான். "தையலே! தம்பலம் தின் என்று கூறி வெற்றிலைப் பையைத் திறந்து ‘எடுத்துக் கொள்' என்றான்.

நங்கை ஒன்றும் பேசாமல் துணிந்து நின்றாள். அவன் அஞ்சினான். அவளைப் பேய் என எண்ணினான். ஆதலால் விலகி நின்று “நான் ஆண் பேய்; பெண் பேய் ஆகிய நீ எனக்கு அருள் செய்வாயாக. அவ்வாறு செய்யாது ஒழியின் இவ்வூரார் இடும்பலியை நீ பெறாமல் நானே எடுத்துக் கொள்வேன்” என்று சொன்னான். தன்னைப் பெண் பேய் எனக் கருதி நடுங்குவதைக் கண்ட நங்கை தன் கையால் மணலை வாரி இறைத்தாள். அதனால் அவன் கடுமையாகக் கதறிப் புலம்பி ஊர்க்கெல்லாம் கேட்குமாறு கத்தினான். இச்செயல் அவள் தலைவனைக் காணுதற்குத் தடையாயிற்று. வலிய புலிக்கென அமைக்கப் பெற்ற வலையிலே, சிறு நரி அகப்பட்டது போல நகைப்பிற்கு இடமான நிகழ்ச்சியாயிற்று.

நள்ளிரவிற் பெய்யுமழை பயிர்களுக்கு மிக நன்மையாம் எனச் சங்கப் பாட்டு ஒன்று சாற்றுகின்றது. ஏரி குளங்கள் வறண்டு போயின; நெற்பயிர் கருக்கொண்டு வாட்டமாய் நிற்கின்றது; அந்நிலையில் நள்ளிரவில் நல்ல மழை பொழிகின்றது. அம்மழைப் பொழிவு பிரிந்து சென்ற கணவன் மீண்டு வந்து தலைவியோடு கூடிய இன்பத்திற்கு ஒப்பானது என்று கூறுகின்றது அது.