உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

179

நள்ளிரவு அமைதிப் பொழுதேயாயினும் யாமங் காவலர் உலாவி வருவர்; நாய் குரைத்துத் திரியும்; அன்றிற் பறவை ஒலியெழுப்பிப் பிரிந்தவர்க்குப் பெருந்துயரூட்டும்; சேற்றிலே நின்ற எருமை அதனை வெறுத்து 'ஐ ஐ' யெனக் கரையும்; வீட்டெலியாகிய உணவைத் தேடும் கூகை குழறும் நள்ளிரவின் நாட்டுக் காட்சிகளுள் சில.

வை

6

மணியை உமிழ்ந்து அதன் வெளிச்சத்தில் பாம்பு இரை தேடும். ஈயற்புற்றில் இருக்கும் புற்றாஞ் சோற்றைத் தின்னக் கரடி கைந்நீட்டும். ஆங்குக் குடியிருந்த பாம்பு கரடியின் கைபட்டு அழியும். புற்றின் மேல் இருந்த மின்மினிகள் பறக்கும். களிற்றிரை தப்பிய புலி கடுக உலவும். இவை காட்டுக் காட்சிகளுள் சில.

நள்ளிரவுப் பொழுதில் ஒரு சேவல் கூவுகின்றது. அதனைக் கேட்ட தலைவிக்கு உண்டாகிய சீற்றத்திற்கு அளவே இல்லை. நெடுநாள் பிரிந்து அன்று வந்த தலைவன் அன்பை நெடும் பொழுது பெறாமல், கெடும்படி செய்து விட்ட சேவலின் கொடுமையை எண்ணிக் குமைந்தாள். "சிவந்த கொண்டையை உடைய ய சேவலே! இனிய உறக்கத்தில் ருந்து என்னை எழுப்பினை நீ! ஆதலால் நள்ளிரவில் வீட்டு எலியைத்

6

தின்னுதற்குத் திரியும் காட்டுப் பூனையின் குட்டிக்கு இரையாகித் துன்பப்படுவாயாக" என்றாள். தன் இன்பத்துக்கு இடையூறு செய்ததற்காகச் சேவல் இறந்தொழிய வேண்டுமாம்! என்ன கடுமையான சாவம்! நள்ளிரவு தந்த வன்மொழி இது; மென் மொழி ஒன்றைக் கேட்போம்.

தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வருகின்றான். அவன் வரும் வழியில் காரிருள் கப்பிக் கிடக்கிறது. கடுமழை பொழிகிறது; காட்டாறு குறுக்கிடுகிறது; களிறு முதலியவை பிளிறித் திரிகின்றன; கரடி முதலிய கடுவிலங்குகள் உலாவு கின்றன; கரடுமுரடான வழி அது. ஆகலின் தலைவி தன் தோழியிடம் சொல்கின்றாள்; தோழி! யானை முதுகில் உள்ள கயிற்றுத் தழும்பு போன்ற சிறிய மலை வழியின் நள்ளிருளில் தலைவன் வருகிறான். ஆதலால் அவன் அடி வைக்கும் இடத்தைப் பார்த்துப் பார்த்துத் தாங்கித் தாங்கிச் சென்றது என் நெஞ்சு! இஃது என்னையோ?

தலைவன் திருவடிகளைத் தாங்கும் தாமரைத் திரு மலராகத் தலைவி தன் நெஞ்சைப் படைத்துக் கூறும் அருமை மிக அருமையாம். இத்தகு அருமையுணர்வுகளை வழங்கும் நள்ளிரவை,