உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ் வளம்

66

"வாழிய இரவே, வாழிய,

16

ஊழி ஊழியிவ் வுலகின் மேவியே

என வாழ்த்தும் பரிதிமாற் கலைஞருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோமாக.

7. சேற்றில் செந்தாமரை

பேருந்திலே வந்து கொண்டிருந்தேன்; அது நகருந்து. அதன் ஓட்டுநர் தம் கடமை முடித்து அவ்வண்டியிலே மீள்கிறார். என் நண்பர்; என் அருகே இடமிருந்தும் இருக்க நாணி நின்றார். 'இருங்கள்' என்றேன்; 'உடையழுக்காக ருக்கிறது' என்றார்; “நாங்கள் வெளுப்பாக இருக்க நீங்கள் அழுக்காக இருக்கிறீர்கள், அமருங்கள்” எனக் கையைப் பிடித்து அமர்த்தினேன்; அமர்ந்தார்.

அவர் படைத்துறையில் பணியாற்றி ஓய்வு கொண்டு இயக்கூர்தித் துறையில் பணியேற்றவர். அவர்க்குப் பழைய செய்திகள் நினைவோடின.

“பாகித்தான்- இந்தியப் போர் நடந்த காலையில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி சொன்னால், அச்செய்தி எவ்வளவு முதன்மைப் பட்டதாயினும் உடனே வெளிப்பட்டது. இந்தியும் அவ்வாறே வெளிப்பட்டது. சிலர் உள்ளாளாய், உறவாளாய் இருந்து கொண்டு, உளவாளாய்ப் பணி செய்தமை புலப்பட்டது. அதனால், நாங்கள் சிலர் கலந்து பேசி ஒரு கருத்துத் தெரி வித்தோம். அது, “தமிழைப் பயன்படுத்துக” என்பது. இயல்பாகக் கட்டளையிடும் இடத்தும், பெறும் இடத்தும் தமிழறிந்தவர் இருந்தனர். அதனால், சிக்கல் எதுவும் இல்லாமல் செய்தி தரப் பட்டது. அச்செய்திகள் உளவாளிகளால் அறியக் கூடாதனவாக அமைந்தமையால் அதன் மறைநிலை காக்கப்பட்டது! பின்னர்த் தொடர்ந்து பயன்படுத்தினர்" என்றார். மிக அரிய செய்தியைக் கேட்ட மன நிறைவு இருந்தது.

மேலும் தொடர்ந்தார்; தமிழ் வேந்தர்கள் வில், கயல், புலி பொறித்த செய்தியை நீங்கள் இலக்கியக் கூட்டங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். நூல்களில் இருந்தும் சான்று காட்டியுள்ளீர்கள். அது புனைவுச் செய்தி இல்லை. மெய்ச் செய்தி ‘சோலாபாசு' என ஒரு கணவாய் உள்ளது. ‘மீனா மார்க்’ 'சேர்னா மார்க்” “கர்கான் மார்க்' என்னும் பெயருடன் இமய