உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

181

மலைப்பகுதியில் ஊர்கள் உள்ளன. 'சோலா பாசு'- 'சோழ கணவாய்'; ‘மீனா மார்க்’ - மீன்குறி பொறித்த இடம்; 'சேர்னா மார்க்'- சேரர் குறியாம் விற்பொறித்த இடம்; 'கர்கான் மார்க்'- கரிகாலன் புலி பொறித்த இடம் என்றார். வியப்புற்றேன். சங்கச் சான்றோர், இளங்கோவடிகளார்,

சயங்கொண்டார்

முதலியோர் கூறியுள்ள இமயப் படையெடுப்புச் செய்திகள் மின்னலிட்டன. அழுக்கில் இருந்து தானே அருநிதியத்தை அரித் தெடுக்க வேண்டியுள்ளது! சேற்றில் தானே செந்தாமரையும் செந்நெல்லும் தோன்றுகின்றன. 'அழுக்கு’ சொன்ன உரை வெளுப்புக்கு' எத்தகு பயன்? அன்பர் விடைபெற்றுக் கொண்டார். அந்த ஓட்டத்திலேயே ஆராய்ச்சித் தொகுதியை நினைத்தேன்; எடுத்துப் பார்த்தேன்.

“சிக்கிம், திபெத்துக்கு இடையே எல்லையாய், நிற்கும் மலைத் தொடர்க்கும் கணவாய்க்கும் சோழ மலைத் தொடர் (Chole range), சோழர் கணவாய் (Chole pass) என்பன பெயர்கள். அப்பெயர்களே இன்றும் வழங்குகின்றன.

"சோல (Chloa) என்பதற்குச் சிக்கிம் திபெத்து மொழிகளில் வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. 'லா' என்பதற்குத் திபெத்து மொழிகளில் ‘கணவாய்' என்ற பொருளுண்டு. நதுலா (Natule) செலப் - லா (Jelap la) எனக் காண்க. ஆனால் சோல (Chola) என்பது அவ்வாறு இரு சொல்லுடையதன்றி ஒரு சொல்லாகவே மலைக்கு வழங்கி வருவதும், அச்சொற்கு வேறு நேர் பொருள் காணாமையும் நோக்கத் தக்கன

என்னும் ஆராய்ச்சித் தொகுதிச் செய்திகள் (அறிஞர் மு. இராகவையங்கார்) பளிச்சிடலாயின.

6

எத்தனை எத்தனை வரலாற்றுச் செய்திகள் மறக்கப் பட்டுள்ளன. மறைக்கப்பட்டுள்ளன. தடங்கண்டும் இடங் கண்டும் போகும் முனைப்பும் முயற்சியும் இல்லாமல் - நிறுவிக் காட்டும் நிலையை மேற்கொள்ளாமல் பொய்யாய் - புனைவாய் - போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றை அள்ளிப் போட்டுக் காண்டு, கடனாற்றும் அரசு தோன்றுமா? அறிஞர் தோன்றுவரா? தமிழ் நாட்டுச் செல்வர்க்கு உணர்ச்சி ஏற்பட்டு

உதவிக்குத் துணையாவரா? இவ்வேக்கம் தான் கைப்

பொருளாகக் கழிந்துபடுமா?