உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

8. புண்படுத்தவா? பண்படுத்தவா?

வழியே போகின்றோம்! கால்விரல், வழியே கிடந்த கல்மேல் பட்டுக் குருதி கொட்டிவிட நேர்கின்றது.புண்ணாகியும் போகின்றது; கல் நம்மைப் புண்படுத்தி விட்டதாக நினைக்கிறோம்; கல் புண்படுத்திவிட்டதா? நாம்தான் நம்மைப் புண்படுத்திக் கொண்டோமா?

கல் நம்மைத் தேடி வந்து இடித்ததா? தேடிவந்து - ஓடி வந்து - ஏன் கூடிவந்து துன்புறுத்தும் இயல் கல்லுக்கு உண்டா? வெறி கொண்ட மாந்தனுக்கு ஈதுண்டே அன்றி இத்தீதுண்டோ கல்லுக்கு?

கல்லுக்கு உயிர் இருந்தால் அன்றோ உணர்வும், விருப்பும், வெறுப்பும், பகையும், காழ்ப்பும், நடுக்கும், நலிப்பும் உண்டாம்! திட்டமிட்டு இடித்துப் புண்படுத்த என்னவுண்டு கல்லுக்கு?

நாமே அதன் மேல் இடித்துப் புண்படுத்திக் கொண்டு அதன்மேல் எளிமையாகப் பழியைப் போட்டு விடுகிறோம். அடிப்படையே தவறாக இருக்கும் போது முடிப்படை எப்படிச் செவ்வையாக இருக்கும்?

நம் குற்றத்தைக் கல்மேல் மட்டும் தானா சுமத்தி அமைகின்றோம். எண்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனை பழிகளைப் பிறர்மேல் பிறவற்றின் மேல் போட்டு விட்டுத் தப்பப் பார்க்கிறோம்! பிறர்மேல் பழி போட்டுப் போட்டே பழகி விட்டால் பழக்கமாகவே போய்விடும் அல்லவோ? அதனைச் சிந்திக்கும் எண்ணமும் உண்டாகாதே!

உரிய பொழுதில் வண்டிக்குப் போக முடியாததை நம் தவறாக ஏற்கிறோமா? 'வண்டி வண்டி முந்திவிட்டது' எவ்வளவு எளிய பழி?

என்பது

நான் காலத்தில் வரத்தவறி விட்டேன். என்று நான் நினை யாதவாறு நான் எப்படிக் காலக்கடைப் பிடியைக் கொள்வேன்? நினைவிலே இல்லாத ஒன்றை நேரில் காட்ட முடியுமா?

கல் ‘புண்படுத்தியது' என்று நினைப்பதை மாற்றிக், கல் ‘பண்படுத்தியது' என்று நினைக்கலாமே! பயனேனும் உண்டே! ‘பண்படுத்தியது' என்று எப்படி நினைப்பது!

சிந்தித்து எடுத்துக் கொண்டால் என்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன!

பண்படுத்தியது