உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

183

‘பார்த்துப்போ' எனக் கல் என்னை எச்சரிக்கிறது என்பது முதல் பண்படுத்தம்!

'ஒதுங்கிப்போ' எனக் கட்டளையிடுகின்றது என்று தெளிவது இரண்டாம் பண்படுத்தம்!

உன்னைப் போலவே பாராமல் வருபவன் இடித்துப் புண்ணாக்கிக் கொள்வான். அவனுக்கு அப்புண்பாடு வாராமல் இருக்க என்னை வழியில் இருந்து எடுத்து அப்பால் போட்டு விட்டுப் போ' என்று வழிப்படுத்துவதாக உறுதிப்படுத்துவது மூன்றாம் பண்படுத்தம்!

இப்படி நினைக்க வருமா? சிந்திக்க வருமா? செயல்பட வருமா? வந்தால் தன்குறைகள் பெரிதும் குறைவதுடன் பிறர் குறையே காணும் பெருங்குறையும் படிப்படியே குறையும்!

அடிப்படைச் சிந்தனையாக இஃது அமையக் கூடாதா?

புண்படுத்தாத கல்லைப் 'புண்படுத்தியது' என்று பழி போடுவதைப் பார்க்கிலும், 'பண்படுத்தியது' என்று நினைத்தால் நமக்கும் நன்மை! பிறர்க்கும் நன்மை! ‘மிதி’ கல்லாக இருந்தது 'மதி' கல்லாக மாறிப்புக்கு மணிமுடி வைக்கத் தக்க வயிரக் கல்லாம் வாழ்வைப் பெற்று விடுமே; வழியே கிடந்த அக்கல், வளவாழ்வு பெறக் கூடாதா?

'கல்' கற்பிக்காத ‘கல்’வியா கல்வி? கல்லில் இருந்து பிறந்ததே கல்வியும் கல்லுதலும் கலையும் கற்பும் பிற பிறவும்!

L

“வழியில் நின் காலடியில் கிடந்த யான், கலை வல்லான் கையிற் படின், நீ கையெடுத்து வழிபடும் தெய்வச் சிலையாக மாறி விடுவேன் இல்லையா?” என்று அஃது எமக்கு நினைவுறுத்தும் பண்படுத்தமாக ஏன் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

“கல்லால் கல்லார், 'கல்லார்”. “தலையாய கல்லாருள் கல்லார் அவர்' என்று சுட்டுகிறதா கல்? அன்றிக் 'கல்' ‘கல் - என ஏவுகிறதா ‘கல்’? நாம் கற்போமே! அதன்படி நிற்போமே!

9. அந்த உணர்வு எங்கே?

நெஞ்சுக்கு உலகம் தரும் மதிப்பு மிகுதி. வாழ்வையே, 'மனம்போல வாழ்வு' என்பர். திருமணத்தை,

ருமனம்

கூடினால் திருமணம்’ என்பர். நெஞ்சே நேரான சான்று