உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

இலக்கியமாக உருப்பெறுதலை நாட்டுகின்றது இப்பாட்டு! வறுமையையும் பிணியையும் விலையாக

வாங்கிக்

கொண்டாலும் கலையுள்ளம் கலையுள்ளமே என்பதை நிலை கொள்ள வைக்கிறதே இது!

13. ஓதாக் கல்வி

வள்ளலார் வரலாற்றையும் வாக்கையும் படித்தவர்கள் ‘ஓதாக் கல்வி' என்னும் செய்தியை அறிவர். ஓதாக் கல்வி என்பது

என்ன?

ஓதாமலே - பயிலாமலே - ஒருவர் பேரறிவினைப் பெற்று விட முடியுமா? முடியும் எனின், கற்றுணர்ந்த - கற்பித்த - பெரு மக்களுக்குப் பெருமை சேர்க்குமா! படியாமலே ஒருவர் பேரறிவு பெற்றார் என்பது அவர் தமக்குமே பெருமை சேர்க்குமா? “படிக்காத மேதை' என்னும் புனைவும் பள்ளிப் படிப்பின்மையைக் கருதிக் கூறுவதேயன்றி அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள், என ஒருதலையாகக் கூறுவதன்றே. தனியே எவ்வளவு படித்தனர், பட்டறிவுற்றனர்!

வள்ளலார் பாக்களிலும் உரைநடை நூல்களிலும் முடங் கல்களிலும் பொதுளி நிற்கும் முந்தையோர் நூற் குறிப்புகள் எத்துணை எத்துணை! வரலாற்றுக் குறிப்புகள் எத்துணை எத் துணை! இலக்கண இலக்கிய மேற்கோள் செய்திகள்தாம் எத்துணை எத்துணை!

திருக்குறளை, வள்ளலார்போல முழுது முழுதாகப் பொன்னே போல் போற்றிக் கொண்டவர் தமிழுலகில் அரியர்! முதல் திருமுறையிலுள்ள ‘நெஞ்சறிவுறுத்தல்' ஒன்று சாலுமே!

நால்வர் நான்மணி மாலையின் நனி சிறப்பென்ன? நால்வர் வாக்குகளிலே தேக்கிய பிழிவின் வழிவன்றோ பெருக்கெடுத்தது அது? சிவப்பிரகாச அடிகள், நால்வர் அருள் மொழிகளைப் பயிலாமல் நால்வர் நான்மணி மாலை இயற்றியிருப்பரோ? வள்ளலார் அருளிய ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடை ய அரசுகள் அருள் மாலை, ஆளுடை ய நம்பிகள் அருள்மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை ஆகியவற்றைக் கற்போர், வள்ளல் பெருமகனார் உள்ளம், அந்நால்வர் பாடல்களில் தேக்கெறியத் தெவிட்டியமையே பாவெள்ளமெனப் பெருக்கெடுத்ததென்பதை மறுக்கவும் துணிவரோ?