உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

201

மூன்றாம் இலக்கணம் பொருள். "மூன்றை மேதினியில் பலவிதமாச் செலவு செயுமாறு புரிவித்து” என்று அடுத்துத் தொடுத்தார். உலகியலில் சிக்கிக் கண்ட கண்ட வழிகளில் பொருளைச் செலவிடுமாறு நேர்ந்து விட்டதாம்!

நான்காம் இலக்கணம் யாப்பு. "நாலிற் பாதியினால் யான் பட்ட பாடு சொல முடியாது” என்றார். 'பாதி' என்னும் பொருள் தரும் மற்றொரு சொல் ‘அரை' என்பது. அந்த ‘அரை’யையும் நான்காம் இலக்கணமாம் ‘யாப்பு’ என்பதையும் இணைத்தால் ‘அரையாப்பு' என்றாகும். அரையாப்பு என்பது ஒருவகை நோய். இடுப்புக்கும் தொடைக்கும் ஊடே அமைந்த சந்து வாயில், வாழைக்காய் போலத் தோன்றி வருத்தும் கட்டி அதுவாம். அதனைத் 'தொடை வாழை' என்று சொல்லும் பெயர், அதன் அமைப்பை விளக்கும். அவ்வரையாப்பு வந்து நடமாடுதல் இல்லாமல் கிடையாகக் கிடந்து பட்ட பாட்டைச் சொல்ல முடியாதாம், அவ்வளவு துயர்ப் பட்டாராம்!

ஐந்தாம் இலக்கணம் அணி. அணி என்பது அணிகலம். அழகு, பெருமை முதலிய பொருள்களைத் தரும் சொல். ஏற்பட்ட துன்பம், பொருள் முடை, நோய் இவற்றால் காதில், விரலில், கழுத்தில் அணிகலம் இல்லை; இவர்க்கு இல்லாமை மட்டுமில்லை; இல்லவர்க்கும் இல்லை; இம் மட்டோ? வாட்டும் வறுமையானும், வருத்தும் பிணியானும் உடலின் அழகாம் தோற்றப் பொலிவும் இல்லாது ஒழிந்தது. ஆதலால், “பஞ்ச மென்பது ஏதுமில்லை” என்றார். பஞ்சம் என்பது ஐந்தாம் இலக்கணமாம் அணி. இனி, இவ்வளவு தான் வேறு பஞ்சம் எதுவும் இல்லை என்று தம்மைத் தாமே எள்ளிக் கொள்ளும் நகையாட்டாகவும் பஞ்சம் அமைகின்றது!

இறுதியில் உள்ள தொடர் : “ஏதுமில்லை இகந்துதெரு உலவுதற்கும் ஏதுவில்லை' என்பது. உரிமைப்பட்டதாகச் சொல் கின்ற வீட்டை விட்டுத் தெருவுக்கு வந்து, நடப்பதற்கும் வாய்ப்பில்லாது போயிற்று என்பது இதன் பொருளாம்.

66

“ஏதுமில்லை ஓதுமில்லை இகந்துதெரு உலவுதற்கும் ஏதுவில்லை” என்பது, இல்லை இல்லை என மும்முறை அடுக்கி வந்து, இல்லாமையைப் பறையறைவதுடன் பாடலிற்

சுவையிருப்பதையும் நிறுவுகின்றது!

புலமையாளர் படுகின்ற நோயும், நொடியும்கூடப் பிறர் போலப் பிதற்றலாய் அமையாமல் பெருவாழ்வு வாழும்