உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ் வளம் 16

மலையாரைப், புலவர் இவரே என்னத்தக்க பேற்றில் வைத்துப் போற்றினார் மருதப்பர். ஊற்றுமலைத் தனிப்பாடற்றிரட்டில் ஒரு பாதி அண்ணாமலையார் பாடல்களாக அமைந்திருப்பது இவ்வுண்மையைக் காட்டும்.

அண்ணாமலையார் பாடிய மடக்கு, திரிபுப்பாடல்கள் பொருள் காண்டற்கரியன. காவடிச் சிந்து பாடிய நாட்டியற் பாவலர் இசைத்த பாடல்கள்தாமா இவையெனக் கற்பாரை ஐயமுறச் செய்ய அமைந்தன! ஆனால், அவற்றுள் சில பாடல்கள் பொருளினிமைக்குச் சான்றாம் புகழ் வாய்ந்தவை. அவற்றுள் ஒன்று, ஐந்திலக்கணங்களும் இரட்டுறல் (சிலேடை) பொருளில் அமைந்தது. மடக்கும் திரிபும் மயக்கா நிலையில் வெளிப்பட்டது.

தமிழ் இலக்கணம், தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்றாக விளங்கியது. அதன் பின்னர், தொல்காப்பியச் செய்யுளியல் செய்தியையும் அதன் வளர்ச்சியையும் விளக்கும் வகையில் ‘யாப்பிலக்கணம்' எனத் தனியே தோன்றி, இலக்கணம் நான்காகியது அதன் பின்னர், தொல்காப்பிய உவம யலை வாங்கிக் கொண்டு, வடமொழி அணிகளையும் சேர்த்து ‘அணியிலக்கணம்' என ஐந்தாம் இலக்கணம் ஒன்று தோன்றியது. இவ்வைந்து இலக்கணங்களும் முறையே எழுத்து, சால், ாருள், யாப்பு, அணி அ என ஆயின. இவ் வைந்து பெயர்களையும் ஊ கமாகக் கொண்டு தோன்றியது அண்ணாமலையார் பாட்டு.

“ஆதியிலக் கணப்படியே யுதித்திரண்டிற் கடங்காத்துன் பாக்கி மூன்றை மேதினியிற் பலவிதமாச் செலவுசெயு மாறுபுரி வித்து நாலிற் பாதியினால் யான்பட்ட பாடுசொல முடியாது பஞ்ச மென்ப

தேதுமில்லை ஓதுமில்லை யிகந்துதெரு வுலவுதற்கும் ஏதுவில்லை.” என்பது அது. (தனிச் செய்யுட் சிந்தாமணி. அண்ணாமலை ரெட்டியார் பாடல் எண். 43; பக்க எண். 595).

ஆதியிலக்கணம் என்பது எழுத்து. இவண் எழுத்து என்பது தலையெழுத்து எனப்படுகின்ற விதியைக் குறித்து நின்றது. தலையில் எழுதிய எழுத்துப்படி பிறந்து என்னும் பொருளைத் தருகின்றது. ‘ஆதியிலக்கணப்படியே உதித்து' என்பது.

இரண்டாம் இலக்கணம் சொல். 'இரண்டிற்கு அடங்காத்

துன்பத்தில் கிடந்து அழுந்தினாராம்!’