உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

199

முறையே பெரும, வென்றோன், வேந்திர், குருசில் என்னும் குறிப்புகளையன்றிப் பெயர்க் குறிப்பொன்றும் இல்லை.

இப்பாடல்களுள், பின்னவை இரண்டும் வாழ்த்தியல் துறைய; முன்னவை இரண்டும் போரியல் துறைய; நெல்விளை கழனியைக் கொள்ளை யூட்டியதும், நாடு சுடு நெருப்பை நல்லொளி விளக்காக்கியதும் மருத நிலம் பாழாகச் செய்ததும் ஆகியவை முதற்பாட்டில் விரிக்கப் படுகின்றன. மலையமான் திருமுடிக் காரியைத் துணையாகக் கொண்டு, சேரமான் மாந் தரஞ்சேரல் இரும்பொறையொடு போரிட்டு வென்ற செய்தி அடுத்த பாடலில் கூறப்பட்டுள்ளது. இவற்றையன்றி, 'இராச சூயச்' செய்தி எங்கும் சொல்லப்பட்டிலது. புறநானூற்றுப் பழைய உரையாசிரியரும் இப்பாடல்களுக்கு வரைந்த உரைகளில் இராசசூயம்' பற்றி எதுவும் உரைத்தாரல்லர். ஆதலால், இல்லாச் செய்திகளை இணைத்துப் பொல்லாங்கு செய்யும் வல்லாண்மை இடைக் காலத்தில் எவ்வளவு விஞ்சியிருந் திருக்கிறது என்பது இப்பெயரானே நன்கு வெளிப்படுவதாம்.

இனி, அரசு துறத்தலை, இராச போகத்தைத் துறத்தலாகவும் (சிலப்பதி.1), மன்னவன் கோயிலை, இராசாவின் கோயிலாகவும் (3. 118), கோவியன் வீதியை, இராசமார்க்கம், இராசப் பெருந்தெருவாகவும் (5. 40),அத்திரியை, இராச வாகனமாகிய அத்திரியாகவும் (6. (6. 119), கோமுறை கோன்முறைகளை, இராச நீதியாகவும் (23.101; 23. 131), பெருநல்வேள்வியை, இராசசூயமாகவும் (28. 178), அரைசு வீற்றிருத்தலை, இராச்சிய பாரமாகவும் (30, 175) சிலப்பதிகார உரையாசிரியர்கள் கூறியதைக் கொண்டு இளங்கோவடிகளார் சொல்லாட்சி ஆய்வது எத்தகு முரணாக அமையுமோ அத்தகு முரணாக அமையும் நூலடைவாளர் குறிப்பைக்கொண்டு நூலுடையாரை ஆய்வது என்க.

12. நிலைகொள்ளும் கலையுள்ளம்

காவடிச் சிந்து' என்ற அளவில் முந்தியும் உந்தியும் நெஞ்சில் நிற்பவர் அண்ணாமலையார். அவர் எளிமை, இனிமை, இசைமை எல்லாம் செறிந்த சிந்துகளை இசைத்து, ‘சிந்துக்குத் தந்தை’ என்னும் சீர்மையுற்றார்.

ஊற்றுமலை, குறுநிலமன்னர் இருதயாலய மருதப்பர் மேல், மட்டற்ற பற்றாளராக இலங்கினார் அண்ணாமலையார். புரவலர் இவரே என்னப் புகழேணியில் வைத்த அண்ணா