உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ் வளம்

16

இணைக்கப் பெற்றதா? என்று ஆய்ந்து பார்த்து முடிவுக்கு வருதல் ஒழுங்கு முறைமையாம்.

'பல்சாலை முதுகுடுமி' என்பதே சான்றோர் ஆட்சியில் இருந்தும், ‘பல்யாக சாலை முதுகுடுமி' எனப் பழம் பாண்டியன் பெயருள் 'யாகம்' செறிக்கப்பட்டது என்பதை முன்னர்க் கண்டுளோம்.

‘சோழன் பெருநற்கிள்ளி' என்பான் பெயரில் 'இராசசூயம்' என இரண்டு வடசொற்களை இணைத்து 'இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி' எனப் பெயர்ப்படுத்து வழங்கியுள்ளனர்.

தொல்காப்பியம், பாட்டு, தொகை, திருக்குறள் முதலாம் தொன்னூல்களில் அரசர், அரசவை, அரசன், அரசியல், அரசிளங் குமரன், அரசிளங்குரிசில், அரசுகட்டில், அரசுவா என்னும் சொற்களும் தொடர்களும் பயில வழங்குகின்றன. ஆனால், 'இராச' என்னும் சொல் ஓரிடத்துத் தானும் வந்திலது.

இகரத்தொடு 'ரகரம் 'ரகரம்' இணைந்து சொல்லாக மேற் குறிக்கப்பட்ட நூல்களில் இரா, இராது என்பனவும், இவற்றைச் சார்ந்தனவுமாகிய சொற்களுமே உள. இராமன் என்னும் பெயர் அகத்திலும், புறத்திலும் உண்டு. மணிமேகலையில், இராகுலன், இராசமாதேவி, இராவணன் என்னும் பெயர்கள் காணப் படுகின்றன. ஆதலால் ‘இராச' என்னும் சொல், சங்ககாலத்தில் வழக்கில் ஊன்றாத சொல் என்பது விளங்கும்.

பழந்தமிழ்ச் சொல்லடைவில் ‘சூயம்’ என்பதொரு சொல் இல்லை. சூது என்பதற்கு அடுத்து, அகர முறையில் கிடைக்கும் சொல் ‘சூர் என்பதே. ஆதலால், சங்கச் சான்றோர் நாளில் வழக்கில் இல்லாத சொல் ‘சூயம்' என்க.

ராச சூயம்' என்னும் சொற்கள், பாடப் பட்டோர் பெயர் சுட்டும் ‘புறநானூற்றுக் குறிப்பில்' இடம் பெற்றுள்ளன. நூல் தொகுத்து அடைவு செய்த நாளில், அத்தொகுப்பாளரால் செறிக்கப்பட்டிருக்கும். அல்லது, அவர் காலத்திற்குப் பின்னர்ச் செறிக்கப்பட்டிருக்கும்.

சோழன் பெருநற்கிள்ளியைப் பற்றிய பாடல்கள் நான்கு கிடைத்துள்ளன. அவ்வனைத்தும் புறநானூற்றில் உள்ளனவே. அவை, பாண்டரங்கண்ணனார் (16), வட ம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் (125), ஒளவையார் (367), உலோச்சனார் (377) என்னும் புலவர் பெருமக்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களில்