உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

197

எனவரும் ‘வேள்விக்குடி'ச் செப்பேட்டில் 'யாகம்' வருகின்றது. ஊரின் பெயர் 'வேள்விக்குடி’. அதனை வழங்கியவன் பெயரில் 'யாகம்' செறிக்கப்பட்டது.

புறப்பாடலைத் தொகுத்தவர் 'பல்யாகசாலை' என்பதைப் பயில வழங்கியதைக் கண்டோம்.

புறநானூற்று உரைகாரர் எவ்விடத்தும் குடுமியைப் ‘பல் யாகசாலை முதுகுடுமி’ என வழங்கினார் அல்லர். மதுரைக் காஞ்சி உரையில் நச்சினார்க்கினியர், பல்சாலை முதுகுடுமி என்பதற்குப் 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என உரை விரிக்கின்றார்.

தொல்காப்பியம் கிளவியாக்கம் 26 ஆம் நூற்பாவுரையில் சேனாவரையர் ‘பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பெயரை எடுத்துக் காட்டுகிறார்.

'யாகம்' என்ற சொல் பாடலில் இல்லாமல் இருந்தும் பின்வந்தோர் அச்சொல்லை அவன் மேல் ஏற்றியது முறைமை யாகாது. வேள்வி செய்தவன் என்பதற்காகவும் அவன் மேல் யாகச் சொல்லைச் சேரச் செய்தது முறைமையாகாது.

சிலம்பு, மேகலை, சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி முதலிய பின்னூல்களிலும் ‘யாகச்’ சொல் இடம் பெறாது இருக்க, தொல்மூதாளனாம் ஒரு வேந்தன் பெயரிலேயே ‘யாகச்’ சொல்லை இணைத்தது, அக்கால முதலே அச் சொல் புகுந்ததையும் வடசொற் புகுதல் பழமையையும் காட்டித், தமிழ் மொழியின் தனித்தன்மையைக் கெடுக்க நினைவார்க்கு எடுத்துக் காட்டாகப் போகி விட்டது.

11. சோழன் பெருநற்கிள்ளி

முன்னோருள், ஒருவர் வாழ்ந்த காலத்தைத் திட்டப் படுத்துவதற்குரிய கருவிகள் பல: அவற்றுள், சொல்லுக்குத் தனிச் சிறப்பாம் இடமுண்டு.

66

“இன்னசொல்

இன்னகாலத்தில் வழக்கில் இல்லை;

ன்னசொல் இவர் பெயரில் இவர் ஆட்சியில் இடம் பெற்றிருத்தலால், இவர் இக்காலம் சார்ந்தவர்” என அறுதி யிட்டு உரைத்தல் ஆய்வாளர் நெறி. ஆனால், அச்சொல் அவர் வழக்கில் இருந்ததா? அல்லது அவர் காலத்துக்குப் பின்னவரால்