உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ் வளம்

16

புறம். 9; நெட்டிமையார் பாடியது. அதில்,

“எங்கோ வாழிய குடுமி"

என்கிறார். ஆனால் பாடினோர் பாடப்பட்டோர் பெயரில் 'பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது” எனக் குறிப்புளது.

புறம். 15; இதுவும் நெட்டிமையார் பாட்டே; இதில் 'பெரும்' என விளியேயுள்ளது. ஆயின் அவன் 'வேள்வி முற்றிய’ செய்தியுள்ளது. வேள்விச் செய்தி விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. வேள்வி என்னும் ஆட்சி அன்றி ‘யாக’ ஆட்சி இல்லை. ஆனால், வழக்கம் போலவே “பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது” எனப் பாடினோர், பாடப்பட்டோர் பெயர்க் குறிப்புளது.

66

புறம் 64. நெடும் பல்லியத்தனார் பாடியது. இதில் "குடுமிக்கோமாற் கண்டு"

என்கிறார். ஆனால் முன்னைப் போலவே பாடினோர், பாடப் பட்டோர் பெயரில் “பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும் பல்லியத்தனார் பாடியது எனக் குறிப்புள்ளது.

ஆக, புறப்பாடல்கள் மூன்றில் குடுமி'ப் பெயரை அறிகிறோம். 'யாகசலை' எங்கும் தலைப்படவில்லை. பிற்காலத் தொகுப்பாளர் செறிப்புரையில் உண்மை அறிகிறோம்.

6

மதுரைக் காஞ்சியில்,

“பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருமின் நெடியோன்" (759-763)

என்னும் செய்தியுள்ளது. இங்கும் ‘யாகச்’ சொல் இல்லை.

இங்குக் காட்டப்பட்ட பாடற் சான்றுகள் எவற்றிலும் யாகச் சொல் இல்லை. ஆயினும் ‘யாகம்' வந்த வகையென்ன? “கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குலந்தவிர்ந்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும்

பாண்டியாதிராசன்"