உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழ் வளம் - பொருள்

-

-

195

மறை

பிறருக்காக வாழ்பவனுக்கு அவன் அறியாமல் முகமாக ஒரு முள்ளும் கூட அதுவும் புறத்தடியில் உள்ளடியில் கூட - தைத்தல் - நோவுமாறு தைத்தல் கூடாது என்னும் கொள்கைச் சிறப்பு என்னே! என்னே! இக்கொள்கையில் ஊன்றியிருந்தால். ‘முத்த நாதனியமும்' 'கோட்சேயியமும் இன்னபிற இயங்களும் நாட்டில் தோன்றியிருக்குமா? “மனிதர் நோக மனிதர் பார்க்கும்' வழக்கமும், வாழ்வும் வாழ்வும் தலை விரித்தாடுமா?

“எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்க” என்று கனிவுடன் வேண்டும் காரிக்கண்ணரின் ‘அந்த உணர்வு எங்கே? எங்கே?'

10. பல்சாலை முதுகுடுமி

பழம் பாண்டிவேந்தர்களுள் ஒருவன் ருவன் 'முதுகுடுமிப் பெருவழுதி' என்பான். இவனைக் காரிகிழார், நெட்டிமையார், நெடும் பல்லியத்தனார் என்னும் சங்கச் சான்றோர்கள் பாடியுளர். அப்பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள. மதுரைக் காஞ்சியிலும் இவனைப் பற்றிய குறிப்பு உண்டு.

இவ்வேந்தன் பெயர் ‘பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என வழங்கப்படுகிறது. இத்தொல்பழம் பாண்டி வேந்தன் பெயரில் உள்ள 'யாகம்' என்ற சொல், அக்காலத்திலேயே வடசொல் தமிழில் புகுந்தமைக்குச் சான்றாகக் காட்டப் பெற்றும் வருகின்றது. ‘யாகம்’ என்பதை 'வேள்வி' எனப்பெயர்த்து ‘பல் வேள்விச் சாலை முதுகுடுமி’ என வழங்கும் நிலையும் ஏற்பட்டது. இவ்வேந்தன் பெயரில் 'யாக' ஒட்டு உண்டா? உண்டானால் அச்சான்று என்ன? இல்லையானால், ‘யாக' 'ஒட்டு' எவரால் எப்படி ஒட்டியது என்பதை அறிந்து, மெய்யுணர்தல் வேண்டும்.

புறம் 6; காரிகிழார் பாடியது. இதில்,

66

“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி”

என்கிறார். ஆனால் பாடினோர் பாடப்பட்டோர் பெயரில் "பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார், பாடியது” எனக் குறிப்புள்ளது. பாடலில் இல்லாத ‘யாகக்’ குறிப்பு தொகுத்து அடைவு செய்தோரால் செறிக்கப் பட்டுள்ளது.