உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

'இப்பொழுதும் தருகிறான்; இன்னும் சில நாள்கள் சென்று வரினும் தருவான்; அதற்குப்பின் வரினும் முன்னே தந்தேன் என்னாது பின்னும் தருவான்! "போனமுறை எத் துணைக் கனிகளைத் தந்தேன்” என்று கருதாமல் பின்னும் பின்னும் பருவந்தோறும் தரும் கனிமரம் போலத் தருவான்; கனி மரத்திற்குக் கூடப்பருவம் உண்டு; பருவத்தால் அன்றிப் பழாது: இவனோ பருவம் அன்றியும் பழுத்துக் குலுங்கும் பண்பாளன்; வருக' வென வருந்தியழைத்து 'வேண்டுவார் வேண்டுவன’ வெல்லாம் நல்கும் விழுப்புகழ்ப் பழவோன்! இவன் நெடிது வாழ வேண்டும்; வாழ்வோர் வாழ, வாழ வேண்டும். இவன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாய் முடியவேண்டும்" என்று எண்ணி எண்ணி மகிழ்கிறார் கண்ணனார்!

“எம் தந்தை போல்வானாகிய இவனை நான் வாழ்த்துதல் வேண்டும்; எப்படி வாழ்த்துவேன்' எனத் திகைத்தார் கண்ணனார். ஒரு ஒரு நொடியில் ஒரு மின்னல் ஒளிக்கீற்று உள்ளொளி போல் பளிச்சிட்டது.

“கொல்லன் தன் கூடத்தைத் தூக்கி ஓங்கி ஓங்கி அறைகிறானே ‘உலைக்கல்' ஆகிய பட்ட ஆகிய பட்டடையில்; அப்பட்டடை அசைகிறதா; அலுங்குகிறதா; நெளிகிறதா; நிலை சாய்கிறதா? அவ்வுலைக்கல் போன்றவன் பிட்டன்! அவன் பகைவர்களோ 'கொல்லுலைக் கூடம்' (சம்மட்டி) போன்றவர்கள். அவனை என்செய்ய மாட்டுவர்? இப்படி எத்துணைப் பேரைக் கண்டவன் பிட்டன்’ என்று ‘மருத்துவன் தாமோதரனார்' என்பார் பிட்டனைப் பாடிய செய்தியை நினைத்தார்! (புறம் 170)

"கோசர் என்பார் ஒரு குடியினர்; வேந்தர் மரபினர்; அவர் படைப் பயிற்சிகள் சிறந்தவர். அப்பயிற்சிக்காக அகன்ற பெரிய முள் முருக்கை மரத்தைக் கம்பமாக நட்டு, அதனை இலக்காகக் கொண்டு வேல் ஏவியும், அம்பு எய்தும் பயிற்சியும் செய்வர்; அவ்வேலுக்கும் அம்புக்கும் பிற பிற படைக்கலங்களுக்கும் அடைக்கலம் தந்து தாங்கும் அம்மரம் அசைவது இல்லை; அம்மரம் போலல்லவோ பகைவர் படைக்கலங்களெல்லாம் தாங்கிய விழுப்புண்ணாளியாக விளங்குகிறான் இப்பிட்டன்" என்று வியந்தார். (புறம். 193).

‘பிட்டன் விழுப்புண் படட்டும்; நேர்த்தாக்குதலில் நெஞ்சகத்து இ L மில்லையாய்ப் படைகள் கள் துளைப்பினும் துளைக்கட்டும். ஆனால் அவன் உள்ளடியில் முள்ளும் நோவுமாறு உறாமல் இருக்கட்டும்" (புறம் 171) என்று பெருமூச்சு விட்டார்.