உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

193

அவர்கள் பிணங்கியதும் இல்லை. அவன் தேர்ச்சித் திறம் அவ்வாறு பாலமாக இணைத்தது.

அவன் பெருநிலம் முழுதாளும் வேந்தனும் அல்லன்; குறுநிலங் காக்கும் கொற்றவனும் அல்லன்; சீறூர் தலைவனே அவன்! ஆனால் வேந்தர்களும் விரும்பும் ஏந்து புகழாளனாக இலங்கினான். பொய்யாச் செந்நாவுடைய புலவர் பெருமக்கள் புகழுக்கு இலக்காகிச் சிறந்தான்; பிட்டங் கொற்றன் என்பது அவன் பெயர்.

66

பிட்டங்கொற்றவனுக்கு இப்பெருமை எப்படி ஆயது? 'வாழ்வோர் வாழ வாழ்பவன் அவன் ஆதலால் புகழின் கொள்கலம் ஆனான்.

உலகில் எவர் இடரின்றி வாழவேண்டும்? வாழத்தக்க நல்லோர் அல்லல் எதுவும் இன்றி வாழவேண்டும். அவர் நல்வாழ்வு உலகின் நல்வாழ்வு. ஆதலால், அவர் நெடிது வாழ்தற்கு அரண்போல் அமைந்து காக்கவல்லார் கட்டாயம் வேண்டும். பிறர்க்கென வாழும் பெருநிலையர் தம்மைக் காத்துக் கொள்ளத் தாம் எண்ணார்! அத்தகையர்க்கு, “நானே துணையும், காவலும், பணிவும், கடனுமாய் நின்று காத்தல் வேண்டும். என்னும் கடப்பாட்டாளன் வேண்டும். அவ்வாறு காப்பவனே வாழ்வோர் வாழ வாழ்பவன் ஆவான்! அவ்வாறு வாழ்பவன் ‘பிட்டன்' என்றால், அவன் மட்டில்லாப் புகழை மதிப்பிடக் கூடுமோ?

புகழாளன் பிட்டனைப் பாடிய புலவர் பெருமக்களுள் ஒருவர் கண்ணனார். எழில்மிக்க 'கருநீலக்கண்ணர்', அவர் காவிரிப்பூம்பட்டினத்தார். முடியுடைய மூவேந்தர் அன்பையும் ஒருபடியாகப் பெற்ற பெருமையர்! அவர் முழுப்பெயர் 'காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்' என்பது.

பிட்டன் பெரும்புகழ் கேட்டு, அவனை அண்மினார் கண்ணனார். தாம் கேட்டறிந்த புகழ் அனைத்தும் உண்மையே என்பதை உணர்ந்தார். தமக்கு அள்ளி வழங்கிய வள்ளன்மையில் ஒன்றினார். அவ்வொன்றுதல் தந்நலத்தால் ஆயதன்று; அவர்க்கு எப்படி அள்ளி அள்ளி வழங்கினானோ அவ்வாறே பிறர்க்கும் வழங்கினான்! மிகுத்தும் வழங்கினான்; இப் 'பெருந்தகை பிறர்க்கும் அன்னன்' என்பதை உணர்ந்த பெருமிதத்தில் ஓங்கினார்.