உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

192

இளங்குமரனார் தமிழ் வளம்

16

த் தமிழினிய நெஞ்சங்கள் என்ன வினாவுகின்றன? ‘அந்த உணர்வு எங்கே?” என்று வினாவுகின்றன இந்நாளில்!

66

அந்தத் தமிழினியர் வாழ்ந்த நாளிலேயே "கொள்ளும் பொருள் இல்லை எனினும் துள்ளுவதைக் கண்டு களிப்ப தற்காகவே, கொல்லும் கொடியரும் இருந்த குறிப்பும் இல்லையோ?” எனின் (கலி 4) “உண்டு” என்பதே விடையாம்! ஆனால், அக்கொடியனைக், கல்லாக் கயவன் என்றும் "கல்லாக்களிமகன்” என்றும் “கல்லினும் வலிய நெஞ்சக் கண்ணிலி” என்றும் இடித்துரைக்கும் சான்றோர் இருந்தனரே. இன்று உளரோ அத்தகையர்? உண்மை உருக்க நெஞ்சர் உருக்கன்ன திண்ணியராய் உறுதி உரைக்கும் நிலையும் உண்டோ இந்நாளில்?

சாதி, சமயம், கட்சி, இனம், தன்னலம் இன்னவற்றால் என்னென்ன கயமைகளையெல்லாம் யல்லாம் கண்டும், காணாமல் போவதும் அவற்றை அறமே என்று பறையறைவதும், கயவரைக் கனிவோடு அரவணைத்துக் கட்டியங் கூறுவதும் நாட்டில் நடைமுறையாக உள்ளன! “நான் எது செய்தாலும் சரியானது; செம்மையானது. நீ எது செய்தாலும் சரியற்றது; கொடுமை யானது” என்றும் “அறத்தைத்தான் கூற வேண்டும்! ஆனால் அது என் பக்கம் இருப்பதாகவே கூற வேண்டும்” என்றும் ஓரஞ் சொல்வாரும் அவரை ஒட்டியிருப்பாரும் உவகை கொள்வாரும் கூட்டுறவாக நாட்டைக் குலைக்கத் துணிந்துள்ள போழ்திலே தமிழினியர் உள்ளம் நாணிக் குனியாமல் இருக்குமா? “அந்த உணர்வு எங்கே?” என்று வினவாமல் இருக்குமா?

று

வஞ்சக வலை விரிப்பையே வாழ்வாகக் கொண்டவர்கள் போகட்டும், குணக்கேட்டை யே கண்கண்ட கடவுளாகக் கொண்டு குலவுவார்கள் ஒழியட்டும்; கொலை செய்து புதைத்த குழியின்மேல் கொடிமுல்லை நட்டு மணங்கொள்ளும் மணவாளர்கள் நீங்கட்டும். தமிழ் வாழ்வுடைய தமிழர்க்கேனும் தகவு வேண்டாவா? அத்தகவமைந்த தமிழினியரை வணங்கல்

வேண்டாவா?

ஒரு தலைவன் வீரமிக்கவன்; அதே பொழுதில் ஈரமும் மிக்கவன்; வீரத்தினை எங்கு எப்படிக் காட்டவேண்டும் என்பதும் அறிவான்; ஈரத்தினை எங்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் அறிவான். ஆதலால் அவனை வீரச் சுற்றம் ஒரு பால் சூழ்ந்திருக்கும்; ஈரச் சுற்றமும் ஒருபால் இயைந்திருக்கும்: அச்சுற்றங்களுள் பிணக்கம் உண்டாக அவன் நடந்து கொண்டது இல்லை.