உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

191

வாழ்பவனுக்குத் தன் வாழ்வையே தர வழி நடந்து வந்து வாழ்த்துரைத்த உணர்வு எங்கே? எளிதில் காணக் கூடுவதோ?

‘தமிழ்’ என்பதற்கு ‘இனிமை' என்னும் பொருள் கண்டனர் முன்னையோர். அக் காட்சி, தேன், பால், அமுது என்றும், இணையிலா இன்ப வீடு' என்றும் அதற்குப் பொருள் விரித்துக் கொஞ்சி மகிழப் புலவோரைத் தூண்டியது. 'தமிழர்' என்பதற்கும் இனியர்' என்னும் பொருள் கிளர்ந்தது. "தமிழ் தழீஇய சாயலவர்” என விளக்கினார் திருத்தக்கதேவர் (சீவக. 2026). "வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரை” யைக் காட்டினார் கம்பர்! (கிட். 28)

66

தமிழ் இனியர் என்பதற்குச் சான்று என்ன? அவர் தம் சாயலே - பாட்டே -நாகரிகமே வாழ்வே - இனியர் என்பதை நிறுவும் சான்று! தமிழர் இனியர் என்பதற்கு வாழ்வுச் சான்று மல்குநிலையில்தான், பெருமையுண்டு; பேறும் உண்டு! இன் றேல் போலிப் புகழும், பொருந்தா உரையுமாய்ப் போயொழியும்! “கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு

99

இது வள்ளுவர் கண்ட தமிழினியர் தகைமை;

(திருக். 984)

“வயல்வரப்பில் அமைந்த வளையுள், நந்தும் அலவனும் உள; வன்மையாய் அடியிட்டு நடந்தால், அவை கலக்கமுற்று அஞ்சிப் பிரிந்து அகலும்; மெல்ல நடக்க” என்பதும்,

“களையாகப் பறித்து வரப்பிலே போடப்பெற்ற குவளை அல்லிக் கொடிகளில் உள்ள பூக்களின் மேல் அடி வைக்காமல் செல்க; ஆங்குள்ள தேனை அருந்தப் புகுந்த வண்டுகள் அல்லல் எய்தக்கூடும்” என்பதும் (சிலம்பு 10-86-93) இளங்கோவடிகள் கண்ட தமிழினியர் நெஞ்சம்.

ஓடும் தேரில் மணி ஒலிக்கிறது. அதனைக் கேட்டுத் துணையொடு வதியும் வண்டு அஞ்சுகிறது. அதற்கு மனம் இரங்கி மணிநா ஒலி செய்யாவாறு இறுக்கிக் கட்டிக் கொண்டு தேரைச் செலுத்துகிறான் ஒரு தலைமகன். (அகம் 4) இது குறுங்குடி மருதனார் குறிக்கும் தமிழினியர் உள்ளம்.

66

'ஆடு மாடுகள் தம் உடலில் ஏற்பட்ட ஊறலை உராய்ந்து அகற்றிக் கொள்ள வேண்டுமே; மொழியறியா அவை என் செய்யும்?" என ஏங்குகிறது இளகிய தமிழ் நெஞ்சம். ஆவுறிஞ்சுகுற்றி'யை நடைவழியில் நட்டு வைக்கிறது.