உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

மருத்துவர் என்ன செய்கிறார்? உடற்பிணியைத் தீர்க்கிறார். அப்பிணி தீர்ந்தார்க்கும், பின் இல்லார்க்கும் தீராப் பிணியாக இருப்பது ஒரு பிணி, அது பசிப்பிணி! பசிப்பிணி, பாழ்ங் கொடும்பாவி! அப் பாவியின் பிடியில் சிக்கியோர் எய்தும் துயர்க்கு அளவில்லை; கேட்டுக்கும் அளவில்லை. ஆதலால் பசிப்பிணி தீர்ப்போர் அறவோர்; அவர் பிறரையும் அறவோர் ஆக்கும் பெருந்தகையன். ஆனால் அவர் பணி, சோம்பர்களையும் மடையர்களையும் ஆக்குவது அன்று; அத் திருப்புகழ்ப் பணியைத் தெளிவில்லாதார் செய்யின் சட்டி தூக்கிச் சாய்ந் துறங்கும் கூட்டமே பெருக்கெடுக்கும்! நாட்டைக் கெடுக்கும்; இவன் பணி அத்தகைத் தன்று; உண்மையில் வாடுவோர்க்கு உழைத்து உருக்குலைவோருக்கு உயிர் இரக்கத்தால் உதவும் பணி! ஆதலால் பசிப்பிணி மருத்துவனாம் இப்பண்ணன் வாழ்வானாக!

'நீடுவாழ்க!' என்பேனா? வாழ்த்து என்பதே அது தானே! காவலன் கடமையை ய ஆ ஆவலுடன் தாங்கிக் கண்ணெனப் போற்றும் இவன், ஒரு சிறந்த காவலன்! ஆதலால் காவலனாம் என் வாழ்நாளையும் இவனே எடுத்துக்கொண்டு நெடுங்காலம் வாழ வேண்டும். 'என் வாழ்நாள் எத்துணை?’ எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றை எல்லாம் ஒருங்கே வழங்க உடன்பாடு கொள்கிறது என் ஆர்வம்! என்னால் கூறுவது அதுவே. இதனை நன்றியுணர்வால் யான் கூறுகிறேன் என்பது இல்லை : நாட்டு வேந்தனாம் நான் பட்டுள்ள தீராக்கடனைத் தீர்ப்பதற்காகக் கூறுகிறேன்! என் வாழ்நாளையும் இவன் கொண்டு வாழ்வானாக!

“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய”

ஒருவன் தன் வாழ்நாளை மற்றொருவனுக்குத் தந்து வாழ வைக்கவும் முடியுமா? 'முடியும்' என ஓரிரு சான்று காட்டுவார் காட்டுக! 'முடியாது’ எனக் கூறுவார் கூறுக! நெஞ்சார்ந்த உணர்வோடு தருதற்கு, முந்து வந்து நின்றானே அந்த வேந்தன்! அந்த உணர்வு எளிதில் காணக் கூடியதோ?

உடலுக்கு ‘மெய்' என்பது ஒரு பெயர். பொய்யாய் ஒழிவதைத் தன் எண்ணத்தாலும், சொல்லாலும், மெய்யாக்கும் மேன்மைக்கு இடமாக இருக்கும் அது பொய்யோ? மெய்யேயாம்! அந்த மெய்யைப் போற்றிய மெய்யன் - சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - உணர்வு எங்கே? வாழ்வோர் வாழ