உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கொள்ளப்பட்டன என்றும், அவையும் மிகப்பெரிதும் ஏகார ஈற்றானே முடிக்கப்பட்டன என்றும் தெளியலாம்.

அகவற்பாவின் இறுதியை வாய்பாட்டு முறையில் “நாளே, மலரே, காசே, பிறப்பே” எனக் கொள்வது சாலும். (நேரே நிரையே, நேர்பே நிரைபே எனினும் ஆம்) இவற்றுள் நாளே மலரே என்பன போதாவோ எனின் போதா. ஏனெனில்; நேர்நிரை என்னும் தனியசைச் சொல்லுடன் ஏகாரம் பெற்று முடிவனவும், நேர்பு, நிரைபு என்னும் ஈரசைச் சொல்லுடன் ஏகாரம் பெற்று முடிவனவும், உள ஆகலின் என்க.

எ-டு :

ஊர் + ஏ = ஊரே;

நாள் + ஏ = நாளே (புறம் 345)

முறை + ஏ = முறையே; மலர் + ஏ = மலரே (ஐங். கடவுள்) வேந்து + ஏ = வேந்தே ; காசு + ஏ = காசே (நற். 81)

+ =

[

உலகு + ஏ = உலகே; பிறப்பு + ஏ = பிறப்பே (குறுந். கடவுள்) ஏகாரத்தைப் போலவே ‘என்’ என்பதற்கும் ‘நாளென்’ 'மலரென்' 'காசென்’, பிறப்பென்' என ஒட்டிக் கொள்க. "மரபு நிலை திரியின் பிறிதுபிறி தாகும்”

18. ஆங்கிலியர் அந்தாதி

நூல்

ஆங்கிலியர் அந்தாதி' என்பதொரு நூல். வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளாரால் இயற்றப் பட்டது அது. திருவல்லிக்கேணி 'முத்தமிழ் அருள்நெறி மன்ற' வெளியீடாக அணித்தே (1985) வெளிப் பட்டுள்ளது.

பாடுபொருளின் பல்திறச் சிறப்புகளைப் பகரும் நூலாக அமைதலே அந்தாதி நூலின் மரபு. ஆயின், ஆங்கிலியர் அந்தாதி அதற்கு மாறான வசை' நூலாம். ஆங்கிலியர் தம் சுவடும் இல்லாமல் அழிந்தொழிய வேண்டும் என்னும் தீரா உணர் வில் பாடப்பட்ட நூலாகும் அது!

66

ம்

அடிகளார் காலம் 1830 - 1898 ‘அயலாட்சி ஒழிப்பு' என்னும் நோக்கு பேராயக் (காங்கிரசுக்) கட்சிக்குக்கூட அக்காலத்தில் தோன்றியதில்லை! ஆனால் “ ஆங்கிலியர் கொடுமையாட்சி அடியோடு அகல வேண்டும்" என்று, அடிகளார் ‘வேண்டாத தெய்வமில்லை' என்னும்படி வேண்டுகிறார்.