உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

233

அருளுரு

பேரருளுக்கு ஓருருவமாக நின்றவர் அடிகளார். அவர் இயற்றிய ‘அறுவகை இலக்கணம் என்னும் நூன்முகப்பில், அருட்சிறப்பைப் பேராசிரியர் கந்தசாமியார்

அவர்தம்

சுட்டுகின்றார்.

"சிற்றெறும்பொன்றை நீ கொன்றால் நம் திருவடி தருவோம்" என்று முதல்வனே முன்வந்து சொன்னாலும், “ஐயா, அம்முத்தி அடியேற்கு ஆகாது, அவ்வுயிர் உய்ய நன்கு அருள்க என்று வேண்டுவார் அடிகளார் என்பது அச்சுட்டு.

அத்தகு அருட்பெருக்க அடிகளாரா ஆங்கிலியர் ஒழியப் பாடினார்? ஆங்கிலியர் செய் கொடுமைகளாக அடிகளார்க்குத் தோன்றியவை எவை? என்னும் எண்ணங்கள் எவர்க்கும் எழுதல் இயற்கை. அடிகளார் அருளுள்ளமே ஆங்கிலியர் அந்தாதி பாட ஏவியது என்பது தீர்மானமான முழுவிடை! கொடுங்கோல் அரசை ஒழித்தல் வேண்டும் என்பது துணை விடை! நூற்பொருள்

ஆங்கிலியர் அந்தாதி 102 பாடல்களையுடையது. முதற் பாடல் காப்பு. இறுதிப்பாடல், பயன்; இடைப்பட்ட பாடல் நூறு. காப்புப்பாடலில் நான்முகன், சிவன், உமை, திருமால், பிள்ளையார், முருகன், குரு என்னும் ஏழு தெய்வங்களையும் முன்னிறுத்திப், “பகைவதைத்து ஊன் உண்ணும் ஆங்கிலியர் தம் படையோடு ஒழியுமாறு அந்தாதி பாட அருள வேண்டும் என்கிறார். அடிகளாரின், அந்தாதி நோக்கு காப்பிலேயே காட்டப் பெறுகின்றது. பயனாம் இறுதிப் பாட்டில், “வாக்குக் கொரு தெய்வம் உண்டென்று நாக்குப் படைத்தவரிற் பலரும் பகர்வது மெய்யானால், ஆக்குட்டியும் தின்னும் ஆங்கிலியர் அழிவுறச் சொல்லிய இப்பாக்குப்பம் (பாடல் தொகுதி) என்னதோ? அவளதேயன்றோ” என்கிறார்.

காப்பும் பயனும் காட்டுவது மட்டுமோ? நூலில் வரும் நூறு பாடல்களுள் முப்பத்தெட்டுப் பாடல்களில் ஆங்கிலியர் கொன்றுண்ணும் கொடுமையையே குறித்துப் பாடுகிறார் அடிகளார். ஆதலால், ‘உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும்' அதிலும் குறிப்பாக ஆக்கொலையும் அப்புலைப் புசிப்பும் உடைமையால் ஆங்கிலியர் அழிய வேண்டும் என்று அந்தாதி பாடினார் அடிகளார் என்பது வெளிப்படையாம்.

-