உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

ஆங்கிலியர், சிரக்கும்பல் ஆயிரம் செய்யவல்லானைச் செயாப்பிரமன் கரக்கணத் தைச்சிரங் கொய்காரியின்று கழிக்கில் நன்றே”

(5)

இலங்கை வேந்தனை அழித்தவன், இந்நாள் இவண் வந்து ஆங்கிலியர் கலங்கப் போரிடும் நாளே நன்னாள்; அதற்குத் திருமகளே நீயே இரக்கம் காட்ட வேண்டும் என்கிறார் (38).

பாஞ்சாலியின் அவிழ்த்த தலை முடிக்க அன்று உதவியவன் இன்று இக்கொடிய ஆங்கிலியரை அழிக்காமல் அரவணையில் துயில்வது பாவம் என்கின்றார். (48)

முதலையின் வாயில் களிறு பட்டு கதறியழ ஆழிபடையால் இடர்தீர்த்தவன் ஆங்கிலியர் கொடுமை தீர்க்காமல் அறிதுயில் கொள்வது என்ன அறிவுடைமையோ என அரற்றுகின்றார். (62)

“நெற்றிக்கண்ணை யுடையவனே, ஆங்கிலியரைப் பாம்பின் வாய்த் தேரையெனப் படாத்துயர் படுத்துதற்காம் வரமொன்று எனக்கு அருளக் கூடாதோ?” என மன்றாடுகின்றார் (44).

66

ஆங்கிலியக் கொடியர் தலை செந்நீர் ஆற்றில் தவழ்ந் தாலன்றிச் சிவன் முதலாம் தெய்வமெலாம் செயலற்ற வையேயாம்” என்று பழிக்கவும் துணிகின்றார் (79).

பொய்ப்பொருளே வேண்டி அறம் பிழைக்கும் ஆங்கிலியர்க்குப் புதியவோர் எமனாக வேலன் வேலொடு வர வேண்டும்” என வேண்டுகிறார் (29).

66

"கதிரோனே, அறிவும் ஆற்றலும் ஒருங்கமைந்த வீரன் ஒருவன் தோன்றி ஆங்கிலியரை அறவே அழித்தற்கு அமைந்த ஒரு நாள் இல்லையோ?” என ஏங்குகின்றார். (76).

"பொதியத்து வாழும் புலவர் குழாத்திடையே என்றும் வாழும் மாமுனிவனாம் அகத்தியன், இச்செந்தமிழ் நாட்டிற் பிறந்தாரும் வாடி அயலாரின் இழிந்த கலைபயிலும் கொடுமை ஏற்படக் கண்டும் கண்ணைத் திறவாமல் கிடக்கின்றானே” என்று தவிக்கின்றார். (30).

"ஆழிப்படையே (சக்கரமே) நீயாவது அறவோர் கூறு வதைக் கேட்டு இரக்கம் கொண்டு ஆங்கிலியக் கொடியரை அழிக்கக்கூடாதோ?” எனக் கெஞ்சுகிறார். (97).

இறைமை நாட்ட அடிகளார், இறைமைப் பொறுப்பிலேயே எல்லாமும் நிகழ்த்த விரும்புதல் இயல்பே; அதனையே அவர் நூல் விரியக் கூறுகிறது.