உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ் வளம் 16

எல்லாரும் வாழ்க :

எல்லாரும் இனிது வாழவேண்டும் என்பதே அடிகளார் வேட்கை! எல்லாரும் இனிது வாழ, என்பதனினும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்! எல்லா உயிரும் இனிது வாழ வேண்டும் என்பதே அது; எல்லா உயிரும் இனிது வாழ வேண்டும் என்னும் வேட்கையராய் நடக்கும் எல்லாரும், இனிது வாழ வேண்டும் என்பதே அடிகளார் தேர்ந்த கருத்து. இதனைக்,

“கொல்லா விரதப் பெருநெறி பற்றிக் குவலயத்தில் எல்லாரும் வாழக் கருதுகின்றேன்

99

(43)

என்கிறார். அஞ்சுதல்

நினைக்கவே

அடிகளார்க்கு

அச்ச

ஆங்கிலியரை முண்டாகின்றதாம். தம்முயிர்க்காக உண்டாம் அச்சமோ? இல்லை! பிறவுயிர்களுக்கு என்னாமோ என்னும் அச்சமே அடிப்படையாம்! விண்ணில் ஒரு பறவையாய்க் கனவில் விளங்கி, அப் பறவையே மண்ணில் மனித வடிவுற்றுக் குருவாகி இனிய சொற்களை யெல்லாம் எனக்குச் சொல்லியது மெய்யானால் இந்த ஈனர்க்கு இவ்வாறு அஞ்ச ஏன் விடுத்தாய் (34) என்று இறையை வேண்டுகின்றார். பிறவுயிர்களின் துடிப்பு, தம் துடிப்பாக ஆகிவிட்ட அருணிலையில் தோன்றுவதே இஃதாம். வீடும் வேண்டா விறல்

எச்செல்வம் எய்தாமல் போனாலும் வருத்தம் இல்லையாம்; அவருக்கு ஒரே ஒரு பேரின்பம் வாய்த்தால் போதுமாம்; அப்பேரின்பம் எது?

உலகவர்க்குக் கூற்றுவனே வடிவாக அமைந்துள்ள ஆங்கிலியர், தண்ணந் தாமரை பனியாலே பற்றி எரிந்து அழிவது போல் எரிந்து அழியுமாறு ஒருவன் வந்து போரிடுவதைக் காண்பதே பேரின்பமாம்; (74). பனியால் எரியும் தாமரை என்பதால் இறையருளால் ஆங்கிலியர் அழிய வேண்டும் என்று குறித்தாராம்.

துறவுப்பயனாம் வீட்டையும் தூரத் தள்ளி விட்டு வேண்டும் வேட்பு அன்றோ ஈது! இன்னும் கூறுகிறார்; "நினைப்பவற்றை யெல்லாம் தட்டின்றி வழங்க ஒருவன் உளன்; அவனை வணங்கி வழிபட்டு நின்மின் என மறைகள் கூறுகின்றன. அதனால், கட்டுத்