உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

241

தறியில் பிணைக்கப் படாக் களிறு போன்று கட்டற்ற என் நெஞ்சம். ஆங்கிலியக் கொலைஞர்களின் குலத்தை வேரோடு களைந்து எறிவதற்கே விரைகின்றது' என்கிறார் (84).

பற்றின் வழியது இன்பமும் துன்பமும் என்னும் தெளிவால் பற்றற்றுத் துறவு மேற் கொண்டவர் அடிகளார். "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்பதைத் என்பதைத் தெளிந்தவர் அடிகளார்; தம்வினை யொழிதற்கன்றோ தம் பற்றற்ற வாழ்வு பயன் தரும். ஆனால், கொடு நிணந்தின்னும் கழுகன்னவர் களித்தும் கூத்தாடியும் வாழும் கொடுங் காலத்தில் பிறந்து அழுது வருந்தும் தீவினை அவருக்கு உண்டாயிற்றாம்! அதனை அழிக்கவல்ல தொண்டர் குழுவோடு தோன்றுவான் ஒருவனையே எண்ணிக்

கொண்டுள்ளாராம்.(57).

"யானும் துறவிதானே! பிற துறவியர் போலவே ஈறிலா இன்பம் எய்த இச்சை கொண்டு உழைப்பவன் அல்லனோயான்; இருந்தும், ஆங்கிலியர் ஆட்சிக் கொடுமைக்கு உட்பட்டு மெலிகின்ற உலகோரின் துயரத்தை யெல்லாம் எண்ணி எண்ணி உருகுகின்ற உணர்வை எதற்காகவோ எனக்கு அளித்தாய்” என முழு முதல்வனை வேண்டி இறைஞ்சுகின்றார்.

தவத்தோர்க்கு அழைப்பு:

(35).

தவத்தோர்களை அறைகூவி அழைக்கின்றார் அடிகளார். "வீடு பேறடையும் வேட்கை மிக்க மாதவத்தீர், கொடுங்கோலருக் கல்லாம் கொடுங்கோலராம் ஆங்கிலியரை அழிக்க வல்ல வீரன் ஒருவனை நம் நேரில் காணுதற்கு முன்னே, நாம் செய்யும் தவம் வீண்! கேடும் உண்டாம். என்சொல் உண்மை! இதனைக் கேட்டேனும் உய்யுங்கள்” என்கிறார் (13). ஆங்கிலேயர் அழிந்து படச் செய்யும் தவமே காலத்துக்கேற்ற தவம் என்பது அடிகள் கருத்தாதல் விளங்கும்.

மேலும் தொடர்கிறார்: “தவத்தால் எப்பேறும் வாய்க்கும் என்று வள்ளுவர் கூறக் கண்டும் இப் பாழரசு நிகழும் காலத்து அதனை ஒழிக்க முயலாமல், சிவத்தை அடையவும் முயல்கின்றாருளரே: அந்தோ இவரோடு என்னையும் சேர்த்துப் பரம் பொருளே கொன்று விடாதே” என்கிறார்.

66

நேரொருவர் இல்லையென்று பலப்பல கோட்டை களையும் அழிக்கும் ஆங்கிலியர் அழிந்து பூழ்தியாகப் போராடும் ஆர்வம் சிறிதும் அல்லாத பொய்த்தவத்தர் மிக்குளர்.