உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

அவரைப் போற்செயலற்றவனாக என்னைத் தொல்பொருளே ஆக்கி விடாதே" என்றும் இறைஞ்சுகிறார் (8).

ஒரு வரம்

L

ஆங்கிலேயர் கொடிய ஆட்சியில் பிறந்ததற்கு இரங்குபவர் அடிகளார். அதற்கு அவர் என்செய்வார்? அவ்வாங்கிலியர் ஆளுங் காலத்தில் இறவாமையேனும் வேண்டும் என்று விரும்புகிறார்."நினைப்பார் நினைத்த வடிவில் தோன்றும் மெய்யாம் தெய்வமே, வஞ்சரும், கயவரும், முழுவெளியரும், அறக்கேடரும், கொடுங்கோலருமாம் இவ்வாங்கிலியர் ஆட்சியில் உடலை விடுகின்ற கொடுமைக்கு என்னைத் தள்ளி விடாதே! இவ்வொன்றையே நின்னிடம் மிகக் கேட்கின்றேன்” என மன்றாடுகின்றார். (58)

போர் வேட்டல்:

என் உள்ளுள் ஒரு தெய்வம் வருகின்றது; "மீண்டும் பிறவாப் பெருநிலை எய்துவதிலும் சோற்றோடு ஊன் கலந் துண்ணும் ஆங்கிலியர் அழிந்து படச் செயலாற்றுதலே மேல் என்று எனக்குக் கிளர்ச்சியூட்டுகின்றது” என்று (18) வியப் புறுகிறார்.

66

இறுதியில்

உச்சநிலைக்கே செல்கிறார் அடிகளார். குணங்கிய (வளைந்த) நாய்ச் சிறுவாலே யனைய ஆங்கிலியப் பாவிகளை எதிரிட்டு நின்று பெரும் போர் செய்து வெற்றி கொண்டு, தெய்வத்திருக் கூட்டமெல்லாம் கொண்டாட நின்னுட் கலப்பது எப்பொழுதோ?" (90) என முதல்வனை வினவுகின்றார். போரிடவும் துணிந்து நின்ற வேட்கை இது!

நிறைவு:

ஆங்கிலியர் ஆட்சி நாளிலே ஆங்கிலியரை இவ்வாறு பழித்துப்பாட முடியுமா? அஞ்சிச் சாவார் மலிந்த காலையில் ஆங்கிலியர் அந்தாதி பாடத் துணிவு வருமா? 'துறவிக்கு வேந்தனும் துரும்பு' என்பதை மெய்ப்பிக்கும் சான்றே இவ் வாங்கிலியர் அந்தாதி எனில், தவறுண்டா?

‘பசுக்காவல்' மட்டுமோ அடிகளார் நோக்கு; வரிக் கொடு மையை வலுவாகக் கூறுகின்றாரே; கொடுங்கோன்மையைக் குமைந்து கூறுகின்றாரே! ஆங்கிலியர்க்கு அடித்தொண்டு புரிந்து கிடப்பாரை அருவறுத்து மொழிகின்றாரே! போரிட்டு