உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

وو

“அவரைப் பார்த்தேன்; அவர் வாய் திறந்து ஒரு சொல் கூடச் சொல்லவில்லை; அவ்வளவு சருக்கு என்று பழியுரைப்பதில்லையா; இதனால், பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும்.

66

நீங்கள் ஒரு சொல் சொன்னால் போதும்; கட்டாயம் நடந்துவிடும்” என்பதில், சொல் வாக்கின் செல்வாக்கு விளங்கும்.

66

ஒரு சொல், சொல்லி வைக்கவும்” என்பதில், ‘சொல்’ கண்டிப்புப் பொருளில் வருகின்றது. எச்சரிக்கை இது.

66

ஒரு சொல்லுக்குச் சொன்னேன்” என்பதில் 'சொல்' 'சும்மா' என்னும் பொருளை வெளிப்படுத்துகின்றது.

“சொல்லி விட்டேன்;அவ்வளவு தான்” என்பதில், “இனி நடப்பதற்கு நான் பொறுப்பில்லை; நீ வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்” என ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நிலையைத்

திட்டப் படுத்துகின்றது.

"சொல்லுக்கு வழிப்பட மாட்டான்” என்பதில், “வாட்டி வருத்துவதற்கு வழிப்படுவான்” என எதிர்மறைக் குறிப்புப் பொருள் தருகின்றது. "பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல்லுடை படுவதும் சொல்லாலே" என்னும் பழமொழியோ, பெருமை சிறுமைகளின் மூலம் சொல்லே என்பதைக் காட்டும். சொற்றுணை

சொற்றுணை உயர்ந்த துணையாம். தன்னந்தனியே காட்டு வழி நடந்து போகிறவனுக்குச் சொற்றுணை பொல எந்தத் துணையும் உதவுவதில்லையே! அவன் பாடிச் சொல்லும் சொல்லே, அவனுக்குத் துணையாவது அருமை அல்லவோ!

சொற்றுணை என்பது பேச்சுத்துணை தானே! அதுதான் நாத் துணை, வாய்த்துணை என்பன. சொற்கோ, சொல்லின் வேந்தர், நாவுக்கரசர், வாக்கின் வேந்தர் என்றெல்லாம் சொல்லப்படுபவர் அப்பரடிகள். அவர் இறைவனைச் சொற்றுணையாக அல்லவோ கண்டார். ‘மாணிக்கவாசகர்' பெயர் சொல்லால் வந்ததே. அதனைச் சொற்றுணையாம் இறையருளியதென்பது எண்ணத் தக்கதே.

சொல்லின் உந்துகோள்

தாய் சொன்ன சொல், தந்தை சொன்ன சொல், தன் காதற்கிழத்தி சொன்ன சொல், அன்பு மக்கள் சொன்ன சொல்