உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

245

வரலாற்றின் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளன. அச்சொற்கள் அசைக்க வொண்ணா உந்து கோளாக

அல்லவோ அமைந்து விடுகின்றன.

சொல்லினிமை

கரும்பனையாள், கரும்பன்ன சொல்லம்மை, குயிலினும் நன்மொழியம்மை, குழல்வாய் மொழியம்மை, பண்மொழி நாயகி, பண்ணின் நேர்மொழி, யாழின் மொழியம்மை, யாழைப் பழித்த மொழியம்மை, பாலினும் நன்மொழியம்மை என வழங்கும் இறைவி பெயர்கள் சொற்சுவை கருதிச் சொல்லப் பட்டவை அல்லவோ!

சொல்வண்ணம்

வண்ணச் சொற்களைச் சுவை சொட்டச் சொட்டப் பாடியதால் அன்றோ, 'வாக்கிற்கு அருணகிரி' யானார்! அவ் வண்ணத் திறம் வளமாக வாய்க்கப் பெற்றமையால் அன்றோ, தண்டபாணி அடிகள் ‘வண்ணச்சரபம்' எனப்பட்டார். அத் திறம் கைவந்ததால் அன்றோ, 'வண்ணக் களஞ்சியப் புலவர்' என ஒருவர் விளங்கினார். சொற்கொடையல்லவோ, இப்பாராட்டுப்

பட்டயங்கள்!

சொல் வளம்

சொல்லுதல் என்னும் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் தாம் எத்தனை? ஒரு நாற்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டினார் பாவாணர். ஆயின், இன்னொரு ன்னொரு னாரு நாற்பது சொற்களுக்கு மேலும் பட்டியலிட்டுக் காட்டும் வண்ணம் தமிழ் வளம் உள்ளது!

“சொல்லுவதை அழுத்திச் சொல்லுதல், அசைத்தல்;

அழுது சொல்லுதல், அரற்றுதல்;

அடித்துச் சொல்லுதல், அறைதல்;

இசைப்படச் சொல்லுதல், இசைத்தல்;

கருவியிசையும் இயைந்ததுபோல் சொல்லுதல், இயம்புதல்;

சினந்து சொல்லுதல், கடிதல்;

இடித்துச் சொல்லுதல், கழறுதல்;

கிளிபோல் சொல்லுதல், கிளத்துதல்;

குயில்போல் சொல்லுதல், குயிலுதல்;