உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ் வளம்

16

கூறுபடுத்திச் சொல்லுதல், கூறுதல்;

தடைவிடையாகச் சொல்லுதல், சாடல்;

பலரறியச் சொல்லுதல், சாற்றுதல்;

வினாவிற்கு மறுமொழியாகச் சொல்லுதல், செப்புதல்;

நூன்முறை சொல்லுதல், நுவலுதல்;

பகுத்துச் சொல்லுதல், பகர்தல்;

பல்கால் சொல்லுதல், பன்னுதல்;

தனக்குத் தானே சொல்லுதல், புலம்புதல்;

இடைவிடாது சொல்லுதல், பொழிதல்;

குழந்தையின் மழலைபோல் சொல்லுதல், மிழற்றுதல்;

பலரும் அறியப் பலமுறை சொல்லுதல் விளம்புதல்;”

சொல்லுதலில் எத்தனை நுண்ணிய வேறுபாடுகள் இந் நுண்ணிய வேறுபாடுகள் தாமே சுவை! மெய்ப்பாடு! இசை! கூத்து! பனுவல்! பாவியம்!

வேரிலேயே பொருள் விளக்கம்:

நேர்மை என்பதன் பொருளை ‘நேர்' என்பது தெள்ளெனக் காட்டும். நேரில் நேர்மை சொல்வது நேர்மை; நேரிலேயே சொல்ல மாட்டான், நேராய்ச் செய்வனோ?

சுடர் எப்படி உண்டாம்; சுடுதலால் உண்டாம்! சுடு படாத ஒன்று சுடர் விடுவது இல்லை! “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்” என விளக்கும் திருக்குறள்.

வலிவந்து வந்து பொறுத்தும் ஆற்றியும் பட்டுப்பட்டே வலிமை உண்டாம்.வலிக்கு அஞ்சி ஆற்றாமை மேற்கொண்டவன் வலியனாகான். தமிழ்ச் சொல்லின் முதனிலையே முழுநிலை காட்டும் மாண்பினது என்பது தெளிவாம்.

அறிவறி பெயரீடு:

பல்லின் நீட்சியால் பெற்ற பெயர் பல்லி.

இடம் விட்டுத் தாவலால் பெற்ற பெயர் விட்டில்; தத்துக் கிளி இ ம்படப் பாய்ந்து செல்லலால் பெற்ற பெயர் பாய்ச்சை, பாச்சை.

அணிபட வரிசையுறக் கோடு அமைதலால் பெற்ற பெயர்

அணில்,

‘கொக் கொக்’ என ஒலிப்பதால் பெற்ற பெயர் கொக்கு;