உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் பொருள்

247

அதன் கழுத்தமைப்பைக் கண்டு ஆக்கப்பட்டது கொக்கி. இப்படி அறவறி பெயரீடுகளே தமிழ்ப் பெயரீடுகள்!

வரலாற்று விளக்கம்:

கரும்பு என்னும் பெயரில் உள்ள 'கரு' என்பது கருமை நிறம் காட்டும். கரி, கரிசல், கரிதல், கரிவு, கருகுதல் இன்ன வெல்லாம் கருநிற வழிவந்தனவே. வெள்ளைக் கரும்பும் போர்க் கரும்பும் உண்டேயென்றால் அப்பெயர்களே அவற்றின் பின் வரவை வெளிப் படுத்தும். கருநிறக் கரும்பே கரும்பு என்று பெற்றுப் பின்னர் அதன் வகைக்குப் பெயராக நின்றதாம். அதற்கு அடைமொழியே விளக்கமாம்.

எலி’

எலி என்பது ஒரு காலத்தில் வெண்ணிறமாக இருந்தது என்பதே சொல்லால் வெளிப்படும் வரலாறாம். எல்லே இலக் கம்’ என்பது தொல்காப்பியம். வெள்ளை வெள்ளெலி என விளக்கிச் சொல்லும் நிலை வந்தது. கருநிற எலி காரெலி எனப்பட்டது. சொல்லில் வரலாறு அடங்கியிருத்தல் ஆழ நினைவார்க்குச் சுவையூட்டுவதாம்.

சொல்லாக்கம்

ஒட்டிய அகத்தை உடையது ஒட்டகம். பன்னாள்கள் ஊணும் நீரும் ஒழிந்தும் கிடக்க வல்லது ஒட்டகம் என்பதை அறிவார். அப்பெயராக்கச் சிறப்பையறிவர்.

உருளைக்கிழங்கு இந்நாட்டு விளைவு அன்று. ஆனால் அதன் வடிவம் இந்நாட்டுப் பொதுமக்களின் பெரு வழக்கில் உள்ள உருளையைக் கொண்டது; அதுவே நிலைத்தது.

லை’

புகையிலை வெளிநாட்டுப் பொருளே! 'புகை' என்பன தமிழகம் அறிந்த சொற்கள். இவ்விரு சொற்களையும் இணைத்துக் கலைச் சொல்லாக்கிக் கொண்டது தமிழ் உள்ளம்! இத்தகு சொல்லாக்கமும் தனிச் சுவையதே.

கலைச்சொற் பிறப்பு

66

அகரமுதல ஆதி” க் குறள் வழியே அகராதி பிறந்தது; அகர முதலியும் பிறந்தது. “நாளென ஒன்றுபோற் காட்டி”யில் இருந்து நாட்காட்டி பிறந்தது. “எழுதுங்கால் கோல்” “சமன் செய்து சீர் தூக்குங் கோல்” ஆகியவற்றில் இருந்து எழுதுகோலும், சமன்கோலும் பிறந்தன. “தக்கார் தகவிலார்" என்பதில் இருந்து “தக்கார்” “பிறந்தார்” இவை பாட்டனார் தந்த பழங்கொடை என்பதில் என்ன ஐயம்?