உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ் வளம் 16

வண்ணச் சினைச் சொல்

செங்கால் நாரை, பைங்கால் கொக்கு, கருமுகமந்தி, செம்பின் ஏற்றை, வெவ்வாய் வெருகு என்பவை வண்ணமும் சினையும் (உறுப்பும்) பெயரோடு தொடர்தலால் வண்ணச் சினைச் சொற்களாம். எத்தகைய சொல் ஒழுங்குகளை வகுத்துக் கொண்டனர் நம்முந்தையர் என வியப்பு எழும்பவில்லையா? செல்வாக்கும் சொல்வாக்கும்

செல்வாக்கு என்பதற்குச் செல்வமும் வாக்கும் சேர்ந் திருத்தல் என்பது ஒருசார் பொருந்தப் பொய்த்தல். ஓரிடத்து ஒருவர் சொல்லிய சொல் பலவிடத்தும், பலரிடத்தும், பல காலத்தும் செல்லும் வாக்காக இருத்தல் அது. வள்ளுவர் வாக்குப் போல், வள்ளலார் வாக்குப் போல், காந்தியடிகள் வாக்குப் போல் பரவியிருத்தல். வள்ளுவனார் செல்வாக்கைச் ‘செலச் சொல்லுதல்' என்பார். 719,722,724,730.

செல்வாக்கு சொல்வாக்காதல் இதனால் தெளிவாம். 'சொல்லேருழவர்' என்று வள்ளுவர் கூறியதும் (872) ‘சொல்லம்பு' என்று கம்பர் கூறியதும் எண்ணத் தக்கனவாம் (தனிப்பாடல்). 'சொல்வலை வேட்டுவன்' என்பது புறப்பாடல் 252.

சொல்லும் சுவையும்

சொல்லின் சுவையை அடுக்கினால் விரிவு மிக்கது. “சொற் சுவை பழுத்த தொகைத் தமிழ்" என்றார் தென்றமிழ்நாட்டுக் குமரகுருபரர். “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் என்றார் நாவீறு படைத்த நல்லிசைப் பாவலர் பாரதியார்.

66

'தலைமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை தில்லை" என்றார். தமிழ்த்தாயின் தவப்பெரு மைந்தராம் பாவேந்தர்.

நிறைவு

6

ணை

சொல்லும் சுவையும் இவை மட்டும்தாமோ? மொழி என்ன! அடுக்கென்ன! மடக்கென்ன! இரட்டுறல் என்ன! மரபென்ன? ஒருபொருட் பன்மொழி என்ன! எத்தனை எண்ணுவது? பலபட விரித்துக் கூறத் தக்க சொல்லும் சுவையும் கட்டுரை அளவு கருதி வகையும் தொகையுமாகச் சுருக்கி ஓராற்றான் உரைக்கப் பெற்ற தாம்!