உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புலவர் இளங்குமரன், முறையாகத் தமிழ் பயின்றவர். தனித் தமிழ்ப்பற்று மிக்கவர். கல்வியைச் செல்வமாக மதித்து, கற்றோரைச் சுற்றமாகக் கொண்டு வாழ்பவர்.இவர், தமிழ் நூற் பரப்பின் எல்லையைக் கண்டவர்; இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்து எடுத்தவர்; ஆராய்ச்சி உலகில் தமக்கென நெறிமுறைகளை அமைத்துக் கொண்டவர்; எதைக் கூறினாலும் தெளிவாகவும் முரண் இன்றியும் கூறுபவர்; கருத்துகளை நிரல்பட உரைப்பவர்.இவருடைய தமிழ்நடை சிக்கல் இல்லாதது; தெளிந்த நீரோடை போன்றது. ஆராய்ச்சியில் நடுநிலைமையும், காமஞ் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் இவர்க்கு இயல்பாக அமைந்த தனிப் பண்பு களாகும்.

பேராசிரியர் மு.வை.அரவிந்தன்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

வளவன் பதிப்பகம்

சென்னை - 600 017