உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

31

ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக்கோடாம் துணை யாகலான்” என்பதும்,

66

“வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல் உதவும், காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்” என்பதும் இவற்றுக்குப் பரிமேலழகர் உரைகள்.

முதற்குறள் விளக்கத்தில் ஊன்று என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது என்று, ஊன்று ஊற்றாகியதனைச் சுட்டினார் பரிமேலழகர்.

பற்றுக்கோடு' என ஊற்று என்பதற்குப் பொருள் கூறினாலும் பற்றுக்கோடு ஊன்றுகோலேயாம். அதனால், பின் வந்த உரையாசிரியர்களும் வெளிப்பட ஊன்றுகோல் போல என்றே குறிக்கலாயினர்.

கேள்விப் பயனை விளக்க, ஈரிடத்தும் ஒரே உவமையை அடுத்தடுத்த பாடல்களிலேயே வள்ளுவர் வைத்தார் என்பது எண்ணித் தெளிவு கொள்ளத் தக்கதாம்.

முதற்பாடலில், ஒற்கத்தின் ஊற்று; அடுத்த பாட லில், இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்; ஊற்றுக்கோல் என்பது ஊன்றுகோலே. ஐயத்திற்கு அறவே இடமில்லா ஆட்சி அது; இழுக்கல் (வழுக்கல்) வேறு தெளிவுறுத்துகின்றது. மேலாய்வுக் குரியது ‘ஒற்கத்தின் ஊற்றே'யாம்.

ஊற்று என்பது வெளிப்படு பொருளே. “ஆற்றுப் பெருக் கற்றடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்” என்பது எவரும் அறிந்ததே. "ஆற்றுக்கண் அடைத்தாலும் ஊற்றுக்கண் உதவும்” என்பதும் பழமொழி. வான் வறண்ட காலத்தும் தான் வறளாமல் உதவும் தகைய ஊற்றே இவண் சுட்டியதாம்.

ஒற்கம் என்பது 'ஒல்கு' என்பதன் வழிவந்த சொல். ஒல்குதல், தளர்தல், குறைதல், சுருங்குதல், வறுமையுறல், அடங்குதல், நலிதல், மெலிதல் ஆகிய பொருள்களைத் தரும். ஒற்கம் என்னும் சொல்லாட்சி திருக்குறளில் இவ்வோரிடத்து மட்டுமே உள்ளது.

மழை பெய்யாமை, வானம் பொய்த்தல், வானம் வறத்தல் எனப்படும். அதன் விளைவு வளங்குன்றல், நீர்மை குன்றல் எனப்படும். இவை வான் சிறப்புக் குறளாட்சிகள். ஆகலின்,