உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம் 16

இனி, அரிய செய்வார் அரியர் என்றும். உரிய செய்வார் உரியர் என்றும் சிறிய செய்வார் சிறியர் என்றும் நடைப்பட இடந்தந்து இடர் விளைத்தலும் கருதுக.

அரிய செய்தலும், அரிய செய்யாமையுமே இவண் கருத்தாகலின் ‘உரிய' ஆட்சிக்கு இடமில்லை.

இனி, உரியது அல்லது உரிமை - உரியதாம் தன்மை. அது பெரியர்க்குப் பெருமை உரியது; சிறியர்க்குச் சிறுமை உரியது. ஆகலின் இரண்டன் இடைப்பட்டதாம் ஒரு நிலையன்று உரியது.

66

“எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்’

99

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

என ‘அரிய' பயில வழங்குதலும், 'உரிய' ஆட்சி இடைநிகர்வாம் பொருள் வகையில் யாங்கும் யாண்டும் இடம்பெறாதிருத்தலும் அறிதல் சாலும். ஆதலால், 'செயற்' கரிய செய்வார் பெரியர் என்னும் குறளில் பாட வேறுபாடுகளைக் காணலும் காட்டலும் மரபு வழிப்பட்ட தன்றாவதுடன், பொருள் வழக்கொடு பொருந்தாததுமாம்.

9. ஊற்றும் ஊற்றுக்கோலும்

“கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை

99

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”

என்பவை கேள்வியில் வரும் நான்காம் ஐந்தாம் குறள்கள் (414, 415).

இக்குறள்களில்

ஊற்று' என்றும், ஊற்றுக்கோல்' என்றும் வரும் இரண்டிற்கும் ‘ஊன்றுகோல்' பொருளே கூறினர்.

"உறுதி நூல்களைத்தான் கற்றிலன் ஆயினும் அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அக்கேள்வி