உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் பொருள்

29

கூடியதும் இல்லை. புதிது காணின் பொருளொடு பொருந்தி வருவதும் இல்லை எனத் தவிர்க்க.

2. அரியதும் உரியதும்

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”

என்னும் குறளைத் தமிழ் கற்றோர் நன்கு அறிவர்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்குரிய செய்கலா தார்”

என்றுதான் பாடம் இருந்திருக்க வேண்டும். படியெடுத்தவர் ‘செயற்குரிய' என்பதைச் ‘செயற்கரிய' என்றே எழுதி விட்டார். “எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்; படித்தவர் பாட்டைக் கெடுத்தார்" என்பது போல ஆகி நிலை பெற்று விட்டது. அதனைச் செயற்குரிய என மாற்றலே முறை என்பார் உளர்.

வள்ளுவ நடை விளக்கம் கொண்டே இதனைத் தெளிவு செய்தல் வேண்டும்.

-

ஒழுக்கம் இழுக்கம் ; வசை இசை : பெரியர் சிறியர்; வீழ்நாள் வாழ்நாள்; அறத்தாறு புறத்தாறு; சிறைகாப்பு நிறைகாப்பு ; தமக்கு பிறர்க்கு; அறம் மறம்; புறத்துறுப்பு அகத்துறுப்பு; துன்புறூஉம் இன்புறூஉம்; இன்சொல் வன்சொல்; இனிய இன்னாத; தினை பனை இன்னவாறு இரண்டன் நடை இரண்டன் நடைகொண்டு ஒன்றை வலியுறுத்தும் வழக்கம் உடையவர் திருவள்ளுவர். அவர் மூன்றன் நடை கொண்டு வலியுறுத்துவார் அல்லர்; அறமுறையும் அன்ன தன்று; இருவேறு உலகத்தியற்கை;” என்னும் இதற்கும் தகும்.

66

இருமை

பெரியர் சிறியர் என்பதற்குச் செய்வார் பெரியர்; செய்கலாதார் சிறியர் என்பது அமைந்த நடை. இனிச், செயற்கு அரிய செய்வார், செயற்கு உரிய செய்வார்; செயற்கு உரியவும் செய்யார் என மூன்றன் நடையாக்கிப் பெரியது, உரியது, சிறியது எனவும் பெரியர், உரியர், சிறியர் எனவும் முப்பகுப்பாக்குதல் இடர் மிக்கதாம்.

“சொல்லாமலே பெரியர்

சொல்லிச் செய்வார் சிறியர்

சொல்லியும் செய்யார் கயவர்”

என முப்பகுப்பு நடை இயலுமாறு அறிக.