உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

என்னும் குறளில் வரும் இழத்தல் இழிதலாக இருக்க வேண்டும் எனக் கருதுவார் உளர்; விரித்து விளக்கியும் வருகின்றனர். உண்மை என்ன?

'உடுக்கை இழிந்தவன்' என்றால் உடை நெகிழ்ந்தவன் என்பது பொருள். நெகிழுங்கால் கை தானாகவே போய் அணைக்கும் - அரவணைக்கும்! அகலவிடாது கட்டும். இது நடைமுறைச் செய்தியே! ஆயின், அவ்விழிதலினும் இழிவானது இழக்கும் நிலை.

தெருவிலோ - சாலையிலோ - கூட்டத்திடையிலோ ஒருவனை இழிவு படுத்துவதற்காக - மானக்கேட்டை ஆக்குவதற்காக கட்டிய உடையைப் பறிக்கும் வன்கொடுமையில் தலைப்படுகின்றான் ஒருவன். தனித்தோ சேர்ந்தோ இருக்கும் இயல்பான சூழலில், தானே நெகிழும் உடையைப் போய்க் கைநெகிழ விடாமல் காக்கும் நிலைமை வேறு. ஒருவன் வலிந்து மானங் கெடுக்க உடையைப் பறிக்கும் நிலை வேறு. பாஞ்சாலியை இழிவு செய்ய மன்னர் அவைக்கு இழுத்துச் சென்று துகில் உரிந்த கடுவாய்த் தனம் போல்வது அது. அந்நிலை ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு நேர்ந்தால் பறிப்பவன் கண்ணிற்படாமல் தன்னுறுப்பைக் காக்க வேண்டிய மானவுணர்வு உயிரினும் விஞ்சியிருக்குமே யன்றோ! அப்பொழுது மானங்கெடாமல் காக்க விரையுங்கை எத்தகு

ரைவும் வலிவும் பொருந்தியதாக இருக்கும்! பறிப்பவன் உடையைத் தொடுமுன்னரே பறிப்பவன் கையைப் பறித்து வீழ்த்த முந்தியகை - தன் கூடாமையால் தன் உடையைத் தன் உடலில் இருந்து நீங்க விடாமல் காக்க முடியாத கை - என்ன செய்யும்? தன் மறையுறுப்பை மெய்ம்மறையென - கவசமெனக் - காக்குமேயன்றோ! அந்நிலையைச் சொல்லுவது இழத்தலேயாம்! இழிதல் அன்றாம்!

“இக்காட்டு வழிப்போயினான் கூறை கோட்பட்டான்”

என்பது ஒரு முதுமொழி. இலக்கணர் எடுத்துக் காட்டும் மொழி. இது உறுதிப்பாட்டை உரைக்க வந்த கால மயக்க மொழி. ஆங்குக் கோட்படுதல் - கொள்ளப்படுதல் - வழிப்பறியாளர்கள், உடை மையைப் பறி செய்வதுடன் உடையைப் பறி செய்வதையும் உரைப்பது அது. தானே இழியும் உடையினும் பிறரால் உடை இழக்க நேருங்கால் உண்டாகும் உணர்வு வேகம் கருதின், ‘இழத்தலின்’ இடப் பொருத்தம் இனிது விளக்கமாம். ஆதலால், உடுக்கை இழந்தவன் கை' என்பதில் பாட வேறுபாடு காண வேண்டியதில்லை. அப்படிப் பாடம் சுவடிச் சான்றொடும்

6