உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

27

படிப்பாரைக் காட்சி நிலைக்கு கொண்டு நிறுத்திக் காட்சியைக் காட்டிக் காட்டி இட்டுச் செல்லும் இயல் நடையன்றோ ஈது! 'கொல்லே ஐயம்' என்பதற்கு எத்தகைய நாடகச் சான்று காட்டி விட்டார் நாவலர்க்கு நாவலராம் பெருநாவலர்! மாதர் என்றாரே ஏன்? ‘மாதர் காதல்' என்பதும் தொல்காப்பிய உரியியல் நூற்பாவே!

இயற்கைப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, ஊழால் கூடும் கூட்டம் எனப்படும் முதற் காதல் காட்சியைத் தொல் காப்பிய வழியில் ‘இடை'யும் ‘உரி’யும் கமழச் செய்தவர் முதற்பாவலர்! எப்பாவலர்க்கும் அரிதாம் திறம் அவர்க்கு எளிதாம் திறமாக வாய்த்திருத்தல் தமிழ் பெற்ற பேறு! தமிழர் பெற்ற தனிப்பேறு!

8. திருக்குறளில் இரண்டு பாடவேறுபாடுகள்

1. இழத்தலும் இழிதலும் :

ஒரு நிலையில் இருந்து அகலுதல் இழத்தல்; ஒரு நிலையில் இருந்து இறங்குதல் இழிதல்.

இழத்தல், அப்பாலாய் அகன்று விடுவது.

இழிதல், நிலையில் சரிந்து அல்லது தாழ்ந்து அதனைத் தழுவியிருப்பது. இரண்டையும் திருக்குறளில் காணலாம். இழத்தல் :

66

'ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை” "இழந்தொறூ உம் காதலிக்கும் சூது

இழிதல் :

66

(463)

(940)

"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை

“இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும்”

(964)

(133)

இழத்தலும் இழிதலும் பொருள் வகையில் இவ்வாறு

வேறுபடுதல் தெளிவாகும்.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

99

இடுக்கண் களைவதாம் நட்பு

(788)