உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் 16

கின்றார்; அப்படியே அடுத்துள்ள வீட்டையும் நின்று அமைந்து நோக்குகின்றார்.

உள்ளத்தில் ஐயம் தோன்றியது; உறுப்புகளுக்கும் அவ் வையம் ஏறியது; நடைக்கும் தடையாயிற்று. நின்று தெளிந்து எட்டு வைக்கும் நிலை உண்டாயிற்று. தெளிவு கொண்டபின் ஐயம் தீர்ந்தபின், அவ்வீட்டைக் காணவரும் போது நடக்கும் நடைவேறு! ஐயுற்ற நிலையில் நடந்த நடைவேறுதானே! இக் கண்ணோட்டத்தொடு வள்ளுவக் காட்சிக்குச் சொல்வோம்.

தலைவன் தலைவியைத் தனியிடத்துக் காண்கின்றான். அவன் கண்ட முதற்காட்சியே அப்பொழுதுதான். அவன் அவளை நோக்கிய நோக்கால் ‘அணங்கோ?' என ஐயுற்றான்! அவள் தன்னைத் தன் எழிலால் வாட்டிய வாட்டுதலால் கொண்ட கருத்து அது. அப்படி வருத்தும் பெண்களை அணங்கு' எனக் கூறுதல் அவன் கேட்டறிந்த செய்தி. ஆதலால் அப்படி எண்ணித் திகைத்தான்! அடுத்தும் நோக்கினான்; அவள் சாயலின் வயப்பட்டான்; தோகை மயிலெனத் தோன்றிய அவளை "ஆய்மயிலோ" என ஐயுற்றான். செறிந்து நீண்ட கூந்தலை நோக்கிய அளவான், ‘மாதோ' எனவும் ஐயுற்றான். அணங்கு, மயில், மாது என்னும் மூன்றனுள் ஒன்றனைத் தெளிதலின்றி மயங்குவதாகத் தன் நெஞ்சை நோக்கிக் கூறினான்.

பயனில்லாத சொல்லைச் சொல்லுதல் ஆகாது என்பதற்காகவே பயனில சொல்லாமை கூறியவர் வள்ளுவர். அப்படியும் பயனில சொல்வானை மகன் என்று கூறாதே; அவன் ‘பதர்’ என்றவரும் அவர். அவர், இன்பத்துப்பால் முதற்பாடலில் மும்முறை ‘கொல்' என்னும் அசைநிலையைப் பயன்படுத்துகிறார் என்றால், ஐயுற்றான் நடைநிலையை விடுத்து, அசை நிலைக்கு ஆட்பட்டு நிற்பதும் நடப்பதும், நிற்பதும் நடப்பதுமாக இயலும் இயலைத் தம் நடையாலேயே புலப்படுத்தும் உத்தியை மேற் கொண்டார் என்பதே யன்றோ! அதன் விளைவே,

66

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

وو

-

என்பது. இடம் நிரப்பவா - பாடல், இசை நிரப்பவா வள்ளுவர் 'கொல்' என்னும் இடைச் சொல்லைப் பயன்படுத்தினார்; அசையைத் தானும் பொருளின்றிப் புகலாப் புலமைச் செல்வர், அப்படிப் புகல்வார் என எண்ணலாமா?